மாணவரின் கன்னத்தைக்
கிள்ளிய ஆசிரியைக்கு
ரூ.50 ஆயிரம் அபராதம்
இந்தியாவில்
சம்பவம்
சென்னையில்
தனியார் பாடசாலை
ஒன்றில் மாணவரின் கன்னத்தைக் கிள்ளி
துன்புறுத்திய ஆசிரியைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50
ஆயிரம் அபராதம்
விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ராம்கௌரி
என்ற பெண்
சென்னை உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த
மனுவில், மயிலாப்பூரில்
உள்ள தனியார்
பாடசாலை ஒன்றில் பயிலும் தனது
மகனின் கன்னத்தைக்
கிள்ளி பாடசாலை
ஆசிரியை மெஹருன்னிசா துன்புறுத்தியதாகவும், இது குறித்து மனித உரிமைகள்
ஆணையத்திடம் முறையிட்டதில், மாணவனுக்கு ரூ.ஆயிரம்
ரூபாய் இழப்பீடு
வழங்க உத்தரவிடப்பட்டதாகவும்
கூறப்பட்டுள்ளது.
இந்த
இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிடுமாறு
மனுவில் ராம்கௌரி
கூறியிருந்தார்.
வழக்கை
விசாரித்த சென்னை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண்
கௌல் மற்றும்
நீதிபதி சத்ய
நாராயணா ஆகியோர்
அடங்கிய அமர்வு,
மாணவனை துன்புறுத்திய
ஆசிரியருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும்,
ஆசிரியர் மீதுள்ள
குற்றவியல் வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள
பெற்றோர் முன்வர
வேண்டும் என்றும்
கூறி, வழக்கை
முடித்து வைத்தனர்
என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment