சொத்துக் கணக்கைத் தாக்கல்
செய்யவில்லையாம்
பாகிஸ்தானில் மக்கள்
பிரதிநிதிகள் 200 பேர் இடைநீக்கம்
பாகிஸ்தானில்
சொத்துக் கணக்கைத்
தாக்கல் செய்யாத
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்
200 பேரை இடைநீக்கம்
செய்து அந்நாட்டு
தேர்தல் திணைக்களம்
அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் தமது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு அவர்களில் பலர் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தேர்தல் திணைக்களம் அவர்களுக்கு அக்டோபர் 15ஆம் திகதி வரை கால அவகாசம் அளித்தது. அதன் பிறகும்
200 பேர் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர்களை இடைநீக்கம் செய்து தேர்தல் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment