முஸ்லிம்களின் தேசிய பிரச்சினை
காணியும், பாதுகாப்பும்
- சஹாப்தீன்
அம்பாரை
மாவட்டத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்
கொண்ட கரையோர
மாவட்டமொன்று அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை கடந்த
சில வாரங்களாக
மு.காவினால்
தூசி தட்டப்பட்டு
முன் வைக்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. கரையோர மாவட்டம்
என்பது மர்ஹும்
எம்.எச்.எம்.அஸ்ரப்பினால்
முன் மொழியப்பட்டதாகும்.
அம்பாரை மாவட்டத்தில்
அரசாங்கத்தின் ஒப்புதலுடன்; தமிழ், முஸ்லிம் மக்களின்
பூர்வீகக் காணிகள்
காலத்திற்கு காலம் கபளீகரம் செய்யப்பட்டு, பெரும்பான்மை
இனத்தினருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளன. இதனால், முஸ்லிம்களை
பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாரை
மாவட்டம் சிங்களவர்களைப்
பெரும்பான்மையாகக் கொண்டதொரு மாவட்டமாக,
திட்டமிடப்பட்ட வகையில் மாற்றியமைக்கப்பட்டு
வருதனை தடுக்கும்
நோக்கிலேயே, அஸ்ரப் கரையோர மாவட்டத்தினை முன்
மொழிந்தார்.
ஆயினும்,
அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர், கரையோர மாவட்டத்தினை
பெற்றுக் கொள்வதற்கான
தீர்க்கமான நடவடிக்கைகளில் மு.கா ஈடுபடவில்லை.
பேரினவாத கட்சிகளுடன்
தேர்தல் ஒப்பந்தங்களை
செய்து கொண்ட
போதெல்லாம், கரையோர மாவட்டத்தினையும் ஒரு கோரிக்கையாக
முன் வைத்தார்களே
அன்றி, அதனை
பெற்றுக் கொள்வதற்கு
தகுதியான நடவடிக்கைகளை
மேற்கொள்ளவில்லை.
மு.காவில் கரையோர
மாவட்டத்தினைப் பற்றி அக்கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி
அடிக்கடி பத்திரிகைகளில்
பேசிக் கொண்டார்.
ஆனால், மு.காவின் தலைவர்
ரவூப் ஹக்கிம்
இம்மாவட்டம் பற்றி வாய்திறக்கவில்லை. மு.காவின்
தவிசாளர் கல்முனை
ஸாஹிரா கல்லூரி
மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில், இன்றைய
அரசாங்கத்தில் இணைந்து கொள்வதன் மூலமாக ஆகக்
குறைந்தது கரையோர
மாவட்டத்தையாவது பெற்றுக் கொள்ளலாமென்று தெரிவித்திருந்தார் என்பதனை ஞாபகப்படுத்துகின்றோம்.
ஆனால், இன்று
வரைக்கும் பெற்றுக்
கொள்ளவில்லை.
தேர்தல்
காலங்களில் மாத்திரம் பேசப்படுகின்றதொரு
கருவாக இருந்து
வந்த கரையோர
மாவட்டம், தற்போது
பேசப்படுகின்றதென்றால், எதிர்வரும் பொதுத்
தேர்தல் அல்லது
ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு,
மக்கள் முன்
வருவதற்கான ஒரு முன் ஆயத்தமா என்ற
கேள்வியும் முன் வைக்கப்படுகின்றது. இன்றைய அரசாங்கத்தில்
இணைந்து கொண்டு
முஸ்லிம்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தோம், முஸ்லிம்
விரோத செயற்பாடுகளை
தடுத்தோம் என்று
சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. அதனால், கரையோர மாவட்டம்
என்ற விடயம்
மு.காவின்
இருதயமாகவுள்ள அம்பாரை மாவட்ட முஸ்லிம்களிடையே அதிக
தாக்கத்தை ஏற்படுத்தும்
என்ற தேர்தல்
கால ஆதாயத்தினையும்
இக்கோரிக்கைக்குள் காண முடிகின்றது.
இதே
வேளை, கரையோர
மாவட்டம் பற்றி
மு.காவின்
உறுப்பினர்களிடையே வாதப் பிரதிவாதங்கள்
இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கரையோர மாவட்டத்தினை மு.காவில் உள்ள
சிலர் தேசிய
பிரச்சினையாக பார்க்கின்றார்கள். ஆனால், அக்கட்சியின் தவிசாளர்
அமைச்சர் பசீர்
சேகுதாவூத் கரையோ மாவட்டம் என்பது முஸ்லிம்களின்
தேசிய பிரச்சினையல்ல.
முஸ்லிம்களின் தேசிய பிரச்சினை காணியும், பாதுகாப்புமாகும்
என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில்
கரையோர மாவட்டம்
என்பது முஸ்லிம்களின்
தேசிய பிரச்சினையல்ல.
தேசிய பிரச்சினை
என்பது, நாட்டில்
வாழும் முஸ்லிம்கள்
எல்லோரும் எதிர்கொள்ளுகின்றவையாக
இருக்க வேண்டும்.
அந்த வகையில்
முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் காணிகள் வடக்கு,
கிழக்கு மாகாணங்களில்
மாத்திரமின்றி, இம்மாகாணங்களுக்கு வெளியேயும்
பறிக்கப்பட்டு வருகின்றன. அதே போன்றுதான், இன்று
வடக்கு, கிழக்கு
முஸ்லிம்களை விடவும் மிகுந்த அச்சுறுத்தல்களை வடக்கு,
கிழக்கு மாகாணங்களுக்கு
வெளியே வாழுகின்ற
முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளார்கள். அண்மையில்
பேருவளை, அளுத்கம,
தர்ஹா நகர்
போன்ற இடங்களில்
முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சிறந்த
எடுத்துக் காட்டாகும்.
ஆகவே,
முஸ்லிம்களின் தேசிய பிரச்சினை காணியும், பாதுகாப்புமாகும்
என்பது யதார்த்தமாகும்.
இவை பற்றி
பேசுதல் வேண்டும்.
தீர்வுகளை காண
வேண்டும். அதற்காக,
கரையோர மாவட்டம்
பற்றி பேசக்
கூடாதென்று சொல்லவில்லை. கரையோர மாவட்டம் என்பது
அம்பாரை மாவட்ட
முஸ்லிம்களின் பிரச்சினையாகும் என்பதனை ஏற்றுக் கொள்ள
வேண்டும். கரையோர
மாவட்டம் கிடைத்தால்
ஏனைய மாவட்டங்களில்
உள்ள முஸ்லிம்களின்
பிரச்சினைகள் தீர்ந்துவிடுமென்று சொல்ல முடியாது. இலங்கையில்
சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்கள், தமிழர்களை
பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்ங்கள்
இருக்கின்ற போது, முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டதொரு மாவட்டம் அவசியமாகும். தற்போது
அம்பாரை மாவட்டம்
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்தாலும்,
அரச அதிபர்
முதல் முக்கிய
நிர்வாக அதிகாரிகளாக
பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளார்கள்.
மேலும், இத்தகைய
அதிகாரிகளை வைத்துக் கொண்டு, பேரினவாதிகள் தங்களின்
திட்டமிட்ட குடியேற்றங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். மிகக் குறுகிய காலத்தில் அம்பாரை
மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக
மாறிவிடுவார்கள். ஆதலால், கரையோர மாவட்டம் என்ற
கோரிக்கை அம்பாரை
மாவட்ட முஸ்லிம்களின்
எதிர்காலத்திற்குரியதாகும்.
அஸ்ரப்பின்
கொள்கைக்கு மாற்றம்
இதே
வேளை, கரையோர
மாவட்டம் இலங்கை
முஸ்லிம்களின் தேசிய பிரச்சினையல்ல என்று கருத்து
தெரிவித்த பசீர்
சேகுதாவூத் கரையோர மாவட்டத்திற்கு எதிராக இருக்கின்றார்.
அவர் பெருந்
தலைவர் அஸ்ரப்பின்
கொள்ளைக்கு மாற்றமாக நடந்து கொண்டிருக்கின்றார் என்று அவருக்கு எதிராக மு.காவில் உள்ள
ஒரு சிலரினால்
கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அட்டாளைச்சேனை
பிரதேச சபையில்
பசீர் சேகுதாவூத்திற்கு
எதிராக கண்டனத்
தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கரையோர
மாவட்டம் முஸ்லிம்களின்
தேசிய பிரச்சினையல்ல
என்பதனை, கரையோர
மாவட்டம் தேவையில்லை
என்பதாக அர்த்தப்படுத்திக்
கொண்டு, பசீர்
சேகுதாவூத்திற்கு எதிராக கருத்துக்களை முன் வைப்பது,
பசீர் சேகுதாவூத்தை
கட்சியிலிருந்து நீக்குவதற்கு அல்லது ஓரங்கட்டுவதற்கு எடுக்கப்படுகின்றதொரு
நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
மு.காவின் ஸ்தாபகத்
தலைவர் அஸ்ரப்பின்
கொள்கைக்கு மாற்றமாக மு.காவின் உயர்பதவிகளில்
உள்ள பலரும்
செயற்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், பசீர்
சேகுதாவூத்திற்கு எதிராக மாத்திரம் ஒரு சிலர்
போர் கொடி
தூக்கி இருப்பது
பாரபட்சமாகும். இன்றைய அரசாங்கத்தில் நிபந்தனைகளின்றி மு.கா இணைந்து
கொள்வதற்கு முற்பட்ட போது, ஹஸன்அலி அரசாங்கத்திடம்
கரையோர மாவட்டத்தையாவது
கோருமாறு கேட்டுக்
கொண்டார். இதன்
போது, தலைமை
ஹஸன்அலியை கடிந்து
கொண்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும்,
அரசியல் யாப்பில்
18வது திருத்தம்
கொண்டு வரப்பட்ட
போது, திவி
நெகும சட்ட
மூலம் கொண்டு
வரப்பட்ட போது
கூட மு.கா கரையோர
மாவட்டத்தினை கோரவில்லை. அரசாங்கத்தோடு இணைந்து கொண்ட
போதும், அரசாங்கம்
கொண்டு வந்த
சட்ட மூலங்களுக்கு
நிபந்தனைகளின்றி ஆதரவு அளித்தமை அஸ்ரப்பின் கொள்கைக்கு
மாற்றமானதாகும். முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியலை
வெறும் பதவிகளுக்காக
அடமானம் வைத்தமையை
அஸ்ரப்பின் கொள்கைக்குரியதென்று அடையாளப்படுத்த
முடியுமா?
அம்பாரை
மாவட்டம் - நிந்தவூரில் கடந்த
2013.02.05 செவ்வாய்க்கிழமை ஹக்கிமின் தலைமையில்
நடைபெற்ற அம்பாரை
மாவட்ட செயற்குழு
கூட்டத்தில், அக்கட்சியின் செயலாளர் ஹஸன்அலி இரண்டு
தீர்மானங்களை கொண்டு வந்தார். அதில் ஒன்று,
அம்பாரை மாவட்டத்தில்
உள்ள கல்முனை,
சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளையும்
உள்ளடக்கிய கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கு முன்னோடியாக
கல்முனையில் மேலதிக அரசாங்க அதிபர் காரியாலயம்
ஒன்று திறக்கப்பட
வேண்டும். அதற்கு
நிதி, நிர்வாகம்,
அபிவிருத்தி போன்றவைகளை கையாளும் அதிகாரங்களும் வழங்கப்பட
வேண்டும். இதனை
அரசாங்கம் ஒரு
மாத காலத்திற்குள்
நிறைவேற்ற வேண்டுமென்றும்
தெரிவித்தார். ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கம்
நிறைவேற்றா விட்டால், அரசாங்கத்துடன் மு.கா இணைந்திருப்பதனை மீள்பரிசீலனை
செய்ய வேண்டுமெனவும்
கேட்டுக் கொண்டார்.
இதனை சபை
ஏகமனதாக ஏற்றுக்
கொண்டது. தீர்மானங்களும்
நிறைவேற்றப்பட்டது.
இதன்
பின்னர், இக்கூட்டத்தில்
உரையாற்றிய ரவூப் ஹக்கிம் கரையோர மாவட்டத்தினை
பற்றி ஒரு
வார்த்தை கூட
கதைக்கவில்லை. இதன் மூலமாக ஹஸன்அலி கொண்டு
வந்த தீர்மானம்
ரவூப் ஹக்கிமுக்கு
விருப்பமற்றதொன்றாகவே இருந்துள்ளது. பின்னர்,
உயர்பீடக் கூட்டமொன்றின்
போது, ஹஸன்அலி
கொண்டு வந்த
தீர்மானம் பற்றி
பேசப்பட்ட போது,
ஹஸன்அலி என்னிடம்
கலந்து பேசாமல்
அதனைச் செய்தார்
என ரவூப்
ஹக்கிம் தெரிவித்திருந்தார்.
ரணில்
விக்கிரமசிங்க ஐ.தே.கவின் தலைவராக
இருக்கும் வரையில்
மு.கா
அக்கட்சியோடு இணைந்து கொள்ள முடியாதென்று மர்ஹும்
அஸ்ரப் தெரிவித்திருந்தார்.
இதற்கு புறம்பாக,
ரணிலுடன் ஒப்பந்தங்களை
செய்து கொண்டமையையும்,
அதன் பின்னர்
கட்சி அடைந்து
கொண்ட சோதனைகளையும்
யாருடைய கொள்கையில்
சேர்த்துக் கொள்வது?
மு.கா தோற்றம்
பெற்ற போது,
நிலத் தொடர்பற்ற
முஸ்லிம் அலகை
கோரியது. இந்த
நிலத் தொடர்பற்ற
அலகு பின்னர்
தென்கிழக்கு அலகாக குறுகிக் கொண்டது. தென்கிழக்கு
அலகு என்பது
கோரி நிற்கும்
கரையோர மாவட்டமாகும்.
இதே வேளை,
தமிழர்கள் தங்களது
சகல போராட்டங்களின்
போதும் இணைந்த
வடக்கு, கிழக்கையே
இன்று வரைக்கும்
வலயுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்
பற்றுதலும், உறுதியும் மு.காவிடம் இல்லை.
தமிழர்கள்
மத்;தியில்
பல கட்சிகள்
உள்ளன. அக்கட்சிகளில்
ஒரு சில
கட்சிகளை தவிர
மற்றவைகள் எல்லாம்
தமிழ்த் தேசிய
கூட்டமைப்பாக இணைந்துள்ளன. இக்கூட்டமைப்பில்
உள்ள கட்சிகளும்,
அதில் உள்ளடக்கப்படாத
கட்சிகளும் இணைந்த வடக்கு, கிழக்கையே கேட்டுக்
கொண்டிருக்கின்றன.
ஆனால்,
முஸ்லிம்களிடம் பல கட்சிகள் உள்ளன. அவை
எவற்றிடமும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு
ஒரு திட்டம்
கிடையாது. ஒவ்வொரு
கட்சியும் ஒவ்வொரு
விதமாக வாய்மொழியாகவே
சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இதனால், முஸ்லிம்
கட்சிகளின் கூட்டமைப்பு என்பது அடைய முடியாததொரு
விடயமாகவே இருக்கின்றது.
ஊவா
மாகாண சபைத்
தேர்தலில் மு.காவும், அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டன. ஆனால், இக்கட்சிகளின்
இணைவு கூட,
ஒன்றில் ஒன்று
நம்பிக்கை வைக்காதவையாகவே
இருந்தன. ரவூப்
ஹக்கிமும், றிசாட் பதியுதீனும் ஒருவரில் ஒருவர்
நம்பிக்கை கொண்டிருந்தால்
ஒன்று மரச்
சின்னத்தில் போட்டியிட்டு இருக்க வேண்டும். அல்லது
மயில் சின்னத்தில்
போட்டியிட்டு இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர்
நம்பிக்கை கொள்ளாமலேயே
பொதுச் சின்னத்திற்கு
இரட்டை இலையை
தேர்வு செய்தார்கள்.
இந்த இணைவு
அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும். இக்கட்சிகள் தேர்தலொன்றில் எப்படி போட்டியிட
வேண்டுமென அரசாங்கம்
தீர்மானிக்கும் போது, அதனை அஸ்ரப்பின் கொள்கை
என்று சொல்ல
முடியாது.
மு.கா அஸ்ரப்பின்
கொள்கைக்கு மாற்றமாக பல விடயங்களில் நடந்து
கொண்டிருப்பதற்கு சொல்லப்படும் காரணம், கட்சியை பாதுகாப்பதற்காகவே என கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. கட்சியை பாதுகாப்பதற்காக என்பது கட்சியில் அஸ்ரப்பின் கொள்கைக்கு மாற்றமாக மக்கள் பிரதிநிதிகள் உள்ளார்கள் என்பதாகும்.
ஆகவே கரையோர மாவட்டம் என்பது அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களைப் பொறுத்த வரை மிகவும் அவசியமாகும். அதே வேளை, முஸ்லிம்களின் தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை காண வேண்டும். அவை பற்றி உறுதியாக பேச வேண்டும். மு.கா கரையோர மாவட்டத்தினை மாத்திரம் கோருமாக இருந்தால், அம்பாரை மாவட்டத்திற்கு வெளியே உள்ள முஸ்லிம்களை புறக்கணித்தாகவே அமையும். இதனால், அம்பாரை மாவட்டத்திற்கு வெளியே மு.காவின் சொல்வாக்கில் இன்னும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
0 comments:
Post a Comment