சிரியா எல்லையின் மூன்றில் ஒரு பகுதியை
ஐ.எஸ் போராளிகள்
கைப்பற்றினர்
ஐ.நா. மனித
உரிமை ஆணையம் தெரிவிப்பு
குர்திஷ்
படையினரை வீழ்த்தி,
சிரியா நாட்டு
எல்லையின் மூன்றில்
ஒரு பங்கை
ஐ.எஸ்.
போராளிகள் கைப்பற்றியுள்ளனர்
என அறிவிக்கப்படுகின்றது.
சிரியா
எல்லையில் கோபானி
என்ற நகரத்தில்
குர்திஷ் படையினரை
வீழ்த்தியதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்,
சிரியா நாட்டு
எல்லையின் மூன்றில்
ஒரு பங்கை
கைப்பற்றியதாக, அங்கு இருக்கும் ஐ.நா. மனித உரிமை
ஆணையம் தெரிவித்துள்ளது.
போராளிகளின்
தாக்குதலில் குர்திஷ் படையின் முக்கியத் தலைவர்
உட்பட பல
வீரர்கள் கொல்லப்பட்டதாகவும்,
இதனை அடுத்து
அங்கு வான்வழித்
தாக்குதலை அமெரிக்கா
தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அந்த ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment