ஐ.எஸ்.ஐ.எஸ்
போராட்ட இயக்கத்தில்
15 ஆயிரம் வெளிநாட்டு ஜிஹாதிகள் சேர்ந்து
உள்ளனர்
ஐ.நா தகவல்
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள்
ஈராக் மற்றும்
சிரியாவின் பல நகரங்களை கைப்பற்றி இஸ்லாமிய
அரசாக அறிவித்து
உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள்
இயக்கத்தில் சேர்ந்து ஆயுத ஏந்தி போரிட
பல்வேறு நாடுகளில்
இருந்து ஜிஹாதிகள்
அந்த இயக்கத்தில்
சேர்ந்ததவாறு உள்ளனர் என ஐ.நா தெரிவித்து
உள்ளது. புதிதாக
80 க்கும் மேற்பட்ட
நாடுகளில் இருந்து
அந்த இயக்கத்தில்
சேருகின்றனர்.எந்த பிரச்சினையும் இல்லாமல்
இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு நடந்து வருகிறது
எனவும் அறிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ்,
ரஷ்யா, மற்றும்
இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து போராட்ட
இயத்திற்கு அதிகமான ஆட்கள் எடுக்கபட்டு
உள்ளனர் என
ஐ.நா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.. ஐ.எஸ்.ஐ.எஸ் போராட்ட இயக்கம்
தொடங்கியதில் இருந்து 15 ஆயிரம் பேர் சேர்ந்து
உள்ளனர். ஜூன்
மாதம் முதல் செப்டம்பர் மாதம்
வரை 3 ஆயிரம்
பேர் இதில்
சேர்ந்து உள்ளதாக ஐ.நா குழு
கணக்கிட்டு உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் போராட்ட இயக்கம்
தனது சோஷியல்
மீடியா மற்றும்
ஜிஹாதி ஆதரவாளர்கள்
நெட்வொர்க் மூலம் ஆட்களை தேர்வு செய்கிறது.
பெரும்பாலான ஆதரவாளர்கள் மேற்கில் இருந்து தேர்ந்து
எடுக்கப்படுகிறார்கள்.அவர்கள் மிகவும்
இளைய வயதினராக
உள்ளனர்
என தகவல்கள்
தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment