மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை
புகையிரதப் பாதை விஸ்தரிப்பு தொடர்பில்

முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை  அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் 

ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம்



கிழக்கு மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகோலும் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான புகையிரதப் பாதை விஸ்தரிப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் .ஆர் மன்சூர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விற்கு கடிதம் ஒன்றை இரண்டாவது தடவையாகவும்அனுப்பி வைத்துள்ளார்.
மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான புகையிரதப் பாதை விஸ்தரிப்புத் திட்டத்;தின் அவசியம் குறித்து முன்னாள் அமைச்சர் மன்சூர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் குறிப்பிட்டிருப்பதாவது;
இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2012.10.17ஆம் திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரையான ரயில் சேவையை பொத்துவில் வரை விஸ்தரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனுப்பிய கடிதம் தொடர்பிலும் அதற்கு ஜனாதிபதியிடமிருந்து தனக்கு கிடைத்த பதில் கடிதம் தொடர்பிலும் அந்தக் கடிதத்தின் பிரகாரம் தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இலங்கை புகையிரத திணைக்களத்திமிருந்து கிடைக்கப்பட்ட பிரதிபலங்கள் திருப்தியளிகாதது குறித்தும் (15-10-2014) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அத்துடன் 24 வருடங்களின் பின் யாழ்தேவி ரயில் சேவை யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்பட்டமையானது யாழ்ப்பாண மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட உன்னதமான சேவையென்றும் அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்மையடைந்துள்ளனர் என்றும் இந்நடவடிக்கையினை மனநிறைவோடு வாழ்த்துவதுடன் யாழ்தேவி சேவை யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்பட்டிருப்பதானது இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இலங்கைக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தியிருப்பதாகவும் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளேன்.
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மாவட்ட அமைச்சராக தான் இருந்த காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு யாழ்தேவி ரயிலிலேயே சென்றதையும் 1980ஆம் ஆண்டு யாழ்தேவி சேவை நிறுத்தப்பட்டதற்கான நிகழ்வுகளை அனுவித்தவன் என்பதையும் நினைவூட்டியுள்ளதோடு தற்போது யாழ்ப்பாணம் வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள புகையிரத சேவை காங்கேசன்துறை வரை நடத்தப்படும் என நம்புவதாகவும் எனது விருப்பத்தை அக்கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளேன்.
இது தவிர, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனாவின் ஆட்சியிலும் ஜனாதிபதி பிரமேதாசவின் ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்துள்ள நான் ஈரான் இஸ்லாமிய குடியரசு அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ்; மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை புகையிரதப் பாதையை விஸ்தரிப்புச் செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கை எடுத்திருந்த வேளை 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அதன் பின்னர் இத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. என்றும் நன்றியுடையவனாக இருப்பதற்கும் கிழக்குக் கரையில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் சுற்றுலா அபிவிருத்திக்கும் மிகவும் உதவக் கூடியதான மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான புகையிரதப்பாதை விஸ்தரிப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன்’.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் .ஆர்; மன்சூர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top