யாழ்ப்பாணத்தை சென்றடைந்த யாழ்தேவி
1990ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர், இன்று 13 ஆம் திகதி திங்கள் கிழமை தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து, சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் சென்றடைந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், இந்த உத்தியோகபூர்வ சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையமும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
பளை ரயில் நிலையத்திலிருந்து இன்று முற்பகல் சுபமுகூர்த்த வேளையில், யாழ்தேவியில் ஏறி அமர்ந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தனர்.
இந்திய அரசின் நிதியுதவியில் சுமார் 10,400 கோடி ரூபாய் செலவில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருப்பது.
இந்த ரயில் சேவை 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1990-இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் போரினிடையே கண்ணிவெடியால் இப் பாதை சேதமடைந்ததைத் தொடர்ந்து, பயணப் பாதை நிறுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment