மலாலாவுக்கு
அமைதி நோபல் பரிசு
தாலிபான் இயக்கம்
கண்டனம்
"நம்பிக்கையில்லாதவர்களின்
தரகர்"
என்றும் விமர்சித்துள்ளது.
பாகிஸ்தானின்
சிறுமி மலாலாவுக்கு
நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தாலிபான் இயக்கம்
தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மலாலாவை "நம்பிக்கையில்லாதவர்களின்
தரகர்" என்றும் விமர்சித்துள்ளது.
தெஹ்ரீக்
இ தலிபான்
அமைப்பிலிருந்து பிரிந்து வந்தா ஜமாத் உல்
அஹ்ரார் என்ற
தாலிபான் இயக்கம்,
தனது ட்விட்டர்
பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ளது. மேலும், நம்பிக்கையில்லாதவர்கள்
மலாலாவை பொய்ப்
பிரகடனம் செய்ய
பயன்படுத்துகிறார்கள் என்றும் அந்த
இயக்கம் தெரிவித்துள்ளது.
"மலாலா வன்முறைக்கு எதிராகவும், ஆயுதங்கள்
ஏந்துவதற்கு எதிராகவும் நிறையப் பேசி வருகிறார்.
ஆனால் நோபல்
பரிசின் நிறுவனர்தான்
வெடிப்பொருட்களை கண்டுபிடித்தவர் என்பது அவருக்கு தெரியாதா?"
என அந்த
அமைப்பின் செய்தித்
தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment