பாகிஸ்தான் சிறுமி
மலாலாவுக்கும்
இந்திய சமூக ஆர்வலர்
கைலாஷ் சத்யார்த்திக்கும்
அமைதி நோபல்
பரிசு
2014ஆம்
ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானைச்
சேர்ந்த மலாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டில்லியில்
வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள்
என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். இவரது குழந்தைகள் மீட்பு
அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு
அளித்துள்ளது.
அமைதி
நோபல் பரிசைப்
பெறுகிறார் சிறுமி மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானில்
மகளிர் கல்விக்காக
போராடி, அதனால்
பல இன்னல்களையும்,
தாலிபான்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ள மலாலாவுக்கு நோபல்
பரிசு அளிக்கப்பட்டுள்ளது
அமைதிக்கான
நோபல் பரிசினை
அளிக்கும்போது கல்வி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராகக் கல்வியின் அவசியம் பற்றிய
விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்களிப்பு செய்ய முடிவதாக
நோபல் கமிட்டி
குறிப்பிட்டுள்ளது.
.உயரிய
நோபல் பரிசை
வெல்லும் இளம்
வயது சாதனையாளர்
என்ற வரலாற்றுச்
சிறப்பையும் பெறுகிறார் 17 வயது யூசுப் மலாலா.
0 comments:
Post a Comment