பாலஸ்தீனத்துக்கு
அங்கீகாரம்
பிரிட்டன்
நாடாளுமன்றத்தில் தீர்மானம்
நாடாளுமன்றத்தின் கீழவையில்,
274-க்கு 12 என்ற வாக்குகள் வித்தியாசத்தில்
இந்தத் தீர்மானம் நிறைவேற்ற்பட்டது
பாலஸ்தீனத்தை
ஒரு நாடாக
அங்கீகரித்து பிரிட்டன் நாடாளுமன்றம் திங்கள்கிழமை தீர்மானம்
நிறைவேற்றியது.
இஸ்ரேலும்,
பாலஸ்தீனமும் தனி சுதந்திர நாடுகளாக ஒன்றையொன்று
அங்கீகரிப்பதன் மூலம் பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு
காண்பதற்கான முயற்சிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்
இந்தத் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.பிரிட்டன்
நாடாளுமன்றத்தின் கீழவையில், 274-க்கு 12 என்ற வாக்குகள்
வித்தியாசத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்ற்பட்டது."இஸ்ரேல் நாட்டின் அருகில் அமைந்துள்ள
நாடாக பாலஸ்தீனத்தை
பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்கிறது' என அந்தத்
தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டன்
பிரதமர் டேவிட்
கேமரூன் உள்ளிட்ட
அமைச்சர்கள் பலர் இதற்கான வாக்கெடுப்பில் கலந்து
கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 650 உறுப்பினர்களைக்
கொண்ட கீழவையில்,
பாதிக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள்
வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். எனினும், அண்மையில் காஸாவில்
நடைபெற்ற போருக்குப்
பின்பு, பாலஸ்தீனப்
பிரச்னைக்கு அமைதித் தீர்வை எட்டுவதற்கான புதிய
முயற்சியை இந்தத்
தீர்மானம் தொடங்கும்
என்று தெரிவித்துள்ள
எம்.பி.க்கள் இந்தத்
தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
0 comments:
Post a Comment