பௌத்த மதத்தைப் போன்று ஏனைய மத
வழிபாட்டுத்தலங்களின் அபிவிருத்திக்கு
21 மில்லியன் ரூபா நிதி
பௌத்த மதத்தைப் போன்று ஏனைய மதங்களையும் பாதுக்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டு ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதி உதவியை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக 21 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.
பௌத்த மதத்தை போதிக்கவும், நாட்டில் உள்ள ஏனைய மதங்களை பாதுகாக்கவும், அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment