பெப்ரவரி 3 இல் தேர்தல் !
ரிஷாத் வசமாகிறது கல்முனை!!
திண்டாட்டத்தில் ஹக்கீம் !!!
( ஏ.எச்.எம்.பூமுதீன் )
நாடு பூராகவுமுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெப்ரவரி 3 இல் நடாத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தேர்தல்கள் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
தொகுதி மற்றும் விகிதாசாரம் இணைந்ததாக வட்டார முறையின் கீழ் தேர்தல் நடைபெறவுள்ளது.
கட்சிகள் வேட்புமனு தாக்களுக்காக வேட்பாளர்களை தயார்படுத்த ஆரம்பித்துள்ளன.
அமைச்சர்களான ரிஷாத், ஹக்கீம் மற்றும் மனோ ஆகியோர் தேர்தல் கூட்டு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சு நடத்தி முடித்துள்ளனர். அடுத்து கட்சிகளுக்கான வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை – அமைச்சர் றிஷாத்தின் தேர்தல் வியூகம் அதிரடியாக இருக்குமென கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூகத்தில் அங்கீகாரமுள்ள, 50 வயதை தாண்டாத, கட்சிக்கு அர்பணிப்புக்களை செய்த, கட்சியின் சிரேஷ்டமானவர்களை, விசுவாசமிக்கவர்களை வேட்பாளர்களாக – போனஸ் ஆசனங்களுக்காக நிறுத்த வேண்டும் என்ற பல்வேறு துறை சார்ந்தோர் கட்சி தலைமையிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய தெரிவுகள் இடெம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதேச ரீதியாகவுள்ள கட்சியின் மத்திய குழு தலைவர் மற்றும் அமைப்பாளர்களும் தேர்தலில் போட்டியிடச் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் செல்வாக்குள்ளவர்களே இவ்வாறான பொறுப்பில் உள்ளதால் அவர்களை களமிறக்கி வெற்றிவாய்ப்பை அதிகரிக்க முடியுமென்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில் – இதுவரை அக்கட்சி தோல்வியுறாத ஒரேயொரு தொகுதி கல்முனையாகும்.
1988 இல் இருந்து 2000 ஆம் ஆண்டுவரை மர்ஹூம் அஷ்ரப்பால் வெற்றி வாகை சூடி வந்த கல்முனை தொகுதி, அதன் பின்னர் கடந்த பொதுத் தேர்தல் வரை தற்போதும் கூட பிரதியமைச்சர் ஹரீஸினால் வெற்றி வாகை சூடி- ஆளுகைக்குள் இருந்து வருகின்றது.
முகாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த , தொடர் வெற்றிகளை கண்ட கல்முனை தொகுதி முதல் தடவையாக தோல்வியை சந்திக்கவுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.
கல்முனை மாநகர சபை தேர்தலின் போதே யாருமே எதிர்பார்க்காத அந்த சரித்திர தோல்வியை முகாவும் – அதன் கொஞ்சநஞ்ச போராளிகளும் சந்திக்கவுள்ளனர். இதற்கான வியூகங்கள் பக்காவா வகுக்கப்பட்டுள்ளது.
வியூகங்களை தாண்டி, நிதர்சனமான – உண்மையான – ஆதாரபூர்வமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு , அதன்மூலம் மக்களாகவே முன்வந்து இந்த சரித்திர தோல்வியை முகாவுக்கு ஏற்படுத்தவுள்ளனர்.
சாய்ந்தமருத்துக்கு இந்த நிலை ஏற்பட – இரு ஊர்களுக்கிடையில் பிரதேசவாதத்தை தோற்றுவித்த முகா தலைவரின் நயவஞ்சகத்தனத்தை இன்று சாய்ந்தமருது சமூகம் நியாயபூர்வமான ஏற்றுக்கொள்ள- உணர்ந்துகொள்ள முன்வருகின்றமையும் முகா கல்முனையில் தோல்வியடைய உள்ளமைக்கு ஒரு உதாரணம் அல்லது குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு விடயமாகும்.
அதுமட்டுமன்றி, கல்முனையில் முகாவின் சரித்திர தோல்வி உறுதியாகின்றது என்பதற்கு முத்தாய்ப்பாய் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஆரம்பிக்கும் வேலை இடம்பெறவுள்ள யாரும் எதிர்பாராத முக்கிய சில கட்சி தாவல் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. தொடர்ச்சியாக பழையவர்களுக்கு முகா இடம் வழங்குவதாலும் இந்த தாவல்கள் சாத்தியமாகின்றன என்கின்றனர் முகா பிரமுகர்கள் சிலர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்ட 7 உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றை அதாவுல்லாவும் மறறொன்றை ஹக்கீமும் மீதி 5 சபைகளை றிஷாத்தும் கைப்பற்றுவர் என மக்களால் எதிர்வு கூறப்பட்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
0 comments:
Post a Comment