புத்தகங்களை
கொள்வனவு செய்வதற்காக
809 தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு
22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
வாசிப்பு
ஆற்றல் மிக்க
பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வெளிநாட்டு பயண வாய்ப்புக்களை
பெற்றுத் தரப்
போவதாக கல்வி
அமைச்சர் அகிலவிராஜ்காரியவசம்
தெரிவித்துள்ளார்.
மாணவர்களின்
வாசிப்பு ரசனையை
மென்மேலும் மேம்படுத்தி, சர்வதேச மட்டத்தில் கூடுதல்
அறிவு படைத்தவர்களாக
மாணவர்கள் திகழ
வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று நேற்று
அலரி மாளிகையில்
இடம்பெற்ற நிகழ்ச்சியில்
கலந்துகொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
நாட்டில்
உள்ள மூவாயிரத்து
312 பாடசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு
செய்வதற்கான 70 கோடி ரூபா நிதியுதவியை பகிர்ந்தளித்து,
பாடசாலைகளுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்களின்
பெயர்கள் அடங்கிய
பாடசாலை நூலகப்
பட்டியலை வெளியிடும்
நோக்கில் இந்த
நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இந்த
நிகழ்வில் உரையாற்றிய
கல்வி இராஜாங்க
அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், சகல
மாகாணங்களையும் சேர்ந்த தமிழ் பாடசாலைகளுக்கும் பெருமளவு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
தெரிவித்தார். மொத்தமாக 809 தமிழ் மொழி மூல
பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளதென்று அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வி
அமைச்சு மாணவர்களின்
வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்
ஒரு கட்டமாகவே இன்று வாசிகசாலைகளுக்கு புத்தகங்களை
பெற்றுக்கொள்வதற்கான
நிதி வழங்கப்படுகின்றது.
அதன்படி மேல் மாகாணத்தில் 61 பாடசாலைகளுக்கும்(17.8 மில்லியன்) மத்திய
மாகாணத்தில் 141 பாடசாலைகளுக்கும் (34.6 மில்லியன்) தென் மாகாணத்தில் 11 பாடசாலைகளுக்கும் (0.3 மில்லியன்) வட மாகாணத்தில் 199 பாடசாலைகளுக்கும் (51.8 மில்லியன்) கிழக்கு மாகாணத்தில் 221 பாடசாலைகளுக்கும் (62.5 மில்லியன்) வடமேல் மாகாணத்தில் 62 பாடசாலைகளுக்கும் (18.9 மில்லியன்) வடமத்திய மாகாணத்தில்
24 பாடசாலைகளுக்கும் (8.3 மில்லியன்) ஊவா
மாகாணத்தில் 49 பாடசாலைகளுக்கும் (13.6 மில்லியன்) சப்ரகமுவ மாகாணத்தில் 41 பாடசாலைகளுக்கும் (10.9 மில்லியன்) ரூபாவுமாக மொத்தமாக 809 தமிழ் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபாய்
வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment