பாடசாலை சீருடைகளுக்கான வௌவ்சர்
துணிகளை வழங்கும் பாடசாலை
அதிபர்களுக்கு எதிராக கடுமையான
ஒழக்காற்று நடவடிக்கை
பாடசாலை
சீருடைகளுக்கான வௌவ்சர்களை மாணவர்களுக்கு வழங்காது, அதற்குப்
பதிலாக துணிகளை
வழங்கும் பாடசாலை
அதிபர்களுக்கு எதிராக கடுமையான ஒழக்காற்று நடவடிக்கை
மேற்கொள்ள அமைச்சர்
அக்கில விராஜ்
காரிவசம் அதிகாரிகளுக்கு
பணிப்புரை வழங்கியுள்ளார்.
வெளியாகியுள்ள
ஊடகச் செய்திகளை அடுத்து அமைச்சர்
இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளார்.
பல கல்வி வலயங்களில் வௌவ்சர்களுக்கு பதிலாக சீருடைத் துணிகள் வழங்கப்படுவதாகவும். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உத்தியோகபூர்வ முத்திரையை வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சுக்கு தெரிய வந்துள்ளது.

மாணவர்களுக்கு தாம் விரும்பும் இடத்தில் சீருடைகளை
பெற்றக் கொள்வதற்கான
சுதந்திரம் உண்டு. இதற்கு அதிபர்கள் ஒத்துழைப்பு
வழங்குவது அவசியமாகும்.
ஆனால் பாடசாலைகளில்
வர்த்தக நிறுவனம்
ஒன்றை பிரபலப்படுத்தவோ
உரிய வர்த்தக
நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யமாறோ, அதிபர்களுக்கு
கோரிக்கை விடுப்பதற்கான
எந்த அதிகாரமும்
கிடையாது என
கல்வி அமைச்சர்
அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment