மழையில் நனைந்தவண்ணம் தேசிய கீதத்துக்கு
தனது மரியாதையை வழங்கிக்கொண்டிருந்த
முஸ்லிம் பெண்
பெரும்பான்மை சகோதரர்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தயிருக்கும் சம்பவம்
நேற்று குருநாகலில் இடம்பெற்ற
ஒரு சம்பவம் குறித்து. எண்ணற்ற பெரும்பான்மை
சகோதரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பதுடன் வாழ்த்துக்களையும்
தெரிவித்து வருகின்றனர்.
ரொஹான்
சேனாதீர Rohan
Senadeera என்பவர் நேற்று தனக்கு
ஏற்பட்ட சம்பவம்
என்ற தலைப்பில் தனது முகநூலில் வெளியிட்ட பதிவின் தமிழ்
பெயர்ப்பு. (மாற்றமின்றி பதிவேற்றப்படுகிறது)
உன்
பெயர் தெரியவில்லை,
ஆனாலும் நான்
உன்னை விரும்புகிறேன்
.
நேற்று
மாலை 4.10 மணியளவில்
நடந்த சம்பவம்
இது. ஆசிரியர்
நியமனங்கள் வழங்கும் விழா நேற்று குருநாகல்
ரோயல் கல்லூரியில்
இடம்பெற்றது.
எனது
மனைவியும் இதற்கு
தகுதி பெற்றிருந்ததால்
நானும் அவ்விழாவுக்கு
சென்றிருந்தேன்.
நியமனம்
பெறுபவர்கள் மண்டபத்துக்கு உள்ளேயும், மற்றவர்களுக்கு மண்டபத்துக்கு
வெளியே ஒரு
கூடாரமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இடவசதி குறைவான
காரணத்தினால் என்னை போன்ற பலர் விழா
ஆரம்பிக்கும் பொழுது வெளியிலே நின்றிருந்தனர்.
அப்பொழுது
தேசிய கீதம்
இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசிய
கீதத்துக்கு மரியாதை செலுத்திக்கொண்டிருந்த
நிலையில் திடீரென
மழை பெய்ய
ஆரம்பித்தது.
நான்
உட்பட சிலர் மண்டபத்துக்கு
உள்ளே ஓடினோம்.
சிலர் வெளியே
போடப்பட்டிருந்த கூடாரத்துக்குள் குதித்தனர்.
மறுபடியும் தேசிய கீதத்துக்காக நிமிர்ந்து நிற்கும்
பொழுதுதான் இக்காட்சி என் கண்களில் சிக்கியது.
சிங்களத்தில்
இசைக்கப்பட்டுக்கொண்டிருந்த தேசிய கீதத்துக்கு
மழையில் நனைந்தவண்ணம்
அவள் நிமிர்ந்து
நின்று தனது
மரியாதை வழங்கிக்கொண்டிருந்தாள்.
வீடியோ
எடுப்பது முறையான
காரியமல்ல என்பதால்
புகைப்படமொன்றை எடுத்தேன். கேட்காமல் புகைப்படத்தை பதிந்தமைக்கு
என்னை மன்னித்துக்கொள்ளவும்.
Thank you
- Rohan Senadeera
மிக்க
நன்றி - ரொஹான்
சேனாதீர
0 comments:
Post a Comment