கல்முனையின் அவலம் தொடர்கிறது

கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள பஸ் நிலையமும்

அம்பாறை நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையமும்

கல்முனை மாநகரப் பிரதேசத்தில் அபிவிருத்தி எனக் காலத்திற்கு காலம் கூட்டங்களைக் கூட்டி ஆரவாரம் செய்பவர்கள் சரியான முறையில் திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதாகவும் இல்லை, அபிவிருத்தி வேலைகள் இடம்பெறுவதாகவும் இல்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இம் மாநகரப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பெரும் தொகைப் பணம் ஒதுக்கப்பட்டிருப்பதாக வருடா வருடம் மக்களுக்கு அதிகாரத்தில் உள்ள  அரசியல்வாதிகளால் ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றதே தவிர அத் தொகைப்பணத்திற்கு அபிவிருத்தி வேலைகள் முறையாக நடைபெறுவதாக இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் அரசியலில் அதிகாரத்திற்கு வருவதற்காக கல்முனை மாநகரத்தை தென் கிழக்கின் முக வெற்றிலை என வர்ணித்து மக்களிடம் வாக்குக் கேட்பவர்கள் இந்நகரத்தின் அபிவிருத்தியில் அக்கறை காட்டுவதாக இல்லை. தேர்தலில் வென்றவுடன் காலத்தை வீணாகக் கழித்துக் கொண்டிருக்கிறார்களே என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் இருந்தே வருகிறார்கள் . மாகாண சபையிலும் கூட. அப்படியிருந்தும் தென் கிழக்கின் முக வெற்றிலை என அரசியல்வாதிகளால் வர்ணிக்கபடும் கல்முனை மாநகரத்தின் இதயமான கல்முனை பஸ் நிலையத்தின் அவல நிலையைப்பாரீர்.
தயா கமகே அமைச்சராகி இரண்டு வருடத்திலேயே அம்பாறைக்கு 28 கோடியில் நவீன பஸ் நிலையம் அமைத்துவிட்டார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top