இது எப்படியிருக்கிறது?

கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தின்

அவல நிலையைப் போக்க

வலது குறைந்தோர் அமைப்பின்

தலைவர் முஹம்மத் அஸ்ரபின் சேவை

கல்முனை வலது குறைந்தோர் அமைப்பின் தலைவர் முஹம்மத் அஸ்ரப் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தின் அவலநிலை தொடர்பாக தெரியப்படுத்தி கோரிக்கைவிடுத்தையடுத்து அவரின்  முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.
முஹம்மத் அஸ்ரப், கல்முனை பஸ்தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாக கானப்படுகின்றது என்றும் அதை செப்பனிட்டு தருமாறும் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு வழங்கிய கோரிக்கையை ஏற்று கடந்த மூன்றாம் திகதி கல்முனை மாநகர ஆனையாளருக்கு அமைச்சர் பைசர் முஸ்தபா விடுத்த உத்தரவுக்கு ஏற்ப பஸ்தரிப்பு நிலையத்தில் காணப்பட்ட நீரை அகற்ற கல் இடப்பட்டுள்ளது.
இவரின் இந்த வேண்டுகோள் அடங்கிய கடிதம் பிரதமர், சுகாதார அமைச்சர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
முஹம்மத் அஸ்ரப் செய்த இந்த சேவையை மக்களுக்கு வேளிக்கொனர தெரியாமல் அந்த கற்குவியலுக்கு மேல் நின்று புகைப்படம் ஒன்றை எடுத்து அதை அவரது முக நூலில் பதிவிட்டுள்ளார்.
அவரின் உடல் ஊனமுற்றிருந்தாலும் உள்ளமும் சேவை செய்யும் மனப்பாங்கும் ஊனமுற்றிருக்கவில்லை

ஆனால் இப்பிரதேசத்தில் அதிகம் பேர் உள்ளம் ஊனமுற்றவர்களாகவும் சோம்பேறிகளாகவும்  கானப்படுகின்றனர் என  முஹம்மத் அஸ்ரபின் செயல்பாட்டை அறிந்து மக்கள் கருத்து வெளியிட்டுள்ளதுடன் கல்முனை வலது குறைந்தோர் அமைப்பின் தலைவர் முஹம்மத் அஸ்ரபின் சேவையைப் பாராட்டியுமுள்ளனர்.
வலது குறைந்தோர் அமைப்பின் தலைவர் முஹம்மத் அஸ்ரப் பஸ் தரிப்பு நிலையத்தில்  செப்பனிட குவிக்கப்பட்டுள்ள  கல் குவியலில் நிற்கின்றார்.

 முஹம்மத் அஷ்ரபினால் அரசியவாதிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

அமைச்சர் பைசர் முஸ்தபாவிடமிருந்து கல்முனை மாநகர ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்

 இது கல்முனை மாநகரத்திலுள்ள  பஸ் தரிப்பு நிலையம்


 இது அம்பாறையில் அமைக்கப்பட்டுள்ள நவீன பஸ் தரிப்பு நிலையம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top