உள்ளூராட்சித் தேர்தலில்
10 வீத பெண்களே வெற்றி
ஆட்சியமைப்பதில் சிக்கல்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பெண்களின் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது.
இதன்படி 25 நிர்வாக மாவட்டங்களிலுமிருந்து 535 பெண்கள் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதற்கிணங்க பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும் 10 வீத பெண்கள் வெற்றிபெற்றுள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், எவ்வாறெனினும் கடந்த தேர்தலில் விருப்பு வாக்குமுறை நடைமுறையில் இருந்த போதும் இரண்டு வீத பெண்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இம்முறை அது
10 வீதமாக அதிகரித்திருப்பது மகிழ்ச்சிக்குரியதும் வரவேற்கத்தக்கதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் 10 க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாமையால் ஆட்சியமைப்பதில் சிக்கல்கள் நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மண்முனைப் பிரதேசத்தில் ஒரு பெண் கூட வெற்றி பெற்றிருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சித் தேர்தலில்,
மாவட்டம்
|
பெண்களின் பிரதிநிதித்துவம்
|
கொழும்பு
|
54
|
கம்பஹா
|
28
|
களுத்துறை
|
33
|
கண்டி
|
28
|
மாத்தளை
|
18
|
நுவரெலியா
|
26
|
காலி
|
32
|
மாத்தறை
|
27
|
அம்பாந்தோட்டை
|
16
|
, யாழ்ப்பாணம்
|
21
|
கிளிநொச்சி
|
04
|
மன்னார்
|
03
|
வவுனியா
|
04
|
முல்லைத்தீவு
|
04
|
மட்டக்களப்பு
|
08
|
அம்பாறை
|
26
|
திருகோணமலை
|
07
|
குருநாகல்
|
45
|
புத்தளம்
|
16
|
அனுராதபுரம்
|
31
|
பொலன்னறுவை
|
09
|
பதுளை
|
24
|
மொனராகலை
|
13
|
இரத்தினபுரி
|
32
|
கேகாலை
|
26
|
என நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் 535 பெண்கள் வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் 1,500 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தப் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவினதல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment