பஸ் தீவிபத்தில் 19 பயணிகள் காயம்
இது பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புபட்டதல்ல
இராணுவம் தெரிவிப்பு
யாழ்ப்பாணத்தில்
இருந்து தியத்தலாவவுக்கு
பயணித்த தனியார்
பஸ்வண்டியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பயணிகள்
காயமடைந்துள்ளனர்.
இந்த
சம்பவம் தியதலாவை
கஹகொல்ல பிரதேசத்தில்
இன்று காலை
5.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது. காயமுற்ற பயணிகளினுள் 7 இராணுவத்தினரும்
5 விமானப்படையினரும் உள்ளடங்குவர்.காயமுமடைந்த
பயணிகள் மருத்துவ
சிகிச்சைக்காக தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த
சம்பவத்தில் எந்தவித பயங்கரவாத செயற்பாடுகளும் இல்லை
என்று இராணுவம்
தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை
பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக
இராணுவ இணையச்செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை
இந்த சம்பவம்
தொடர்பாக இன்று
அரசாங்க தகவல்திணைக்களத்தின்
கேட்போர் கூடத்தில்
நடைபெற்ற வாராந்த
செய்தியாளர் மாநாட்டில் இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளரின்
கேள்விகளுக்கு இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித்
அத்தபத்து பதிலளிக்கையில்,
இந்த
சம்பவம் குறித்து
பொலிஸார் விசாரணை
நடத்தும் அதே
வேளை இராணுவமும்
விசாரணை நடத்தி
வருகின்றது. இதில் பயணம் செய்த பாதுகாப்பு
தரப்பினரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
என்றும் அவர்
மேலும் தெரிவித்தார்.
இந்த
சம்பவம் பயங்கரவாத
சம்பவத்துடன் தொடர்புபட்டதல்ல என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்திலிருந்து
வந்த தனியார்
பயணிகள் பஸ்
கஹகொல்ல என்ற
பிரதேசத்தில் மற்றொரு
பஸ்ஸில் பயணிகளை
இடமாற்றம் செய்துள்ளனர்.
அதன்போதே குறித்த
பஸ்ஸில் இந்த
சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதலில் தீ
சம்பவம் ஏற்பட்ட
பின்னர் வெடிப்பு
இடம்பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment