அம்பாறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களின்

முன்மாதிரி பாராட்டத்தக்கது

அம்பாறை நகரில் நேற்று இடம்பெற்ற சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சரவை துணைப்பேச்சாளரும் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை கைதுசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தை இனவாத தோரணையில் சித்தரிக்காது ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட்டமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் இதன் போது கூறினார்.
சில தரப்பினர் வேண்டுமென்றே இவ்வாறான சம்பவங்களை ஏற்படுத்தி மீண்டும் அமைதியற்ற நிலையை தோற்றுவிப்பதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொலிஸாரின் ஒத்துழைப்பிற்கென இப்பகுதியில் இராணுவத்தினரும் உதவிவருகின்றனர்.
செய்தியாளர் : இந்த சம்பவத்திற்கு அடிப்படை காரணமாக உணவில் போடப்பட்ட குளிசை குறித்து அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா?
அமைச்சர் : இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக இணையத்தளங்களில் காணொளி ஒன்று உலாவிவருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர். இவ்வாறான காணொளிகளை எவர் வேண்டுமானாலும் வெளியிடலாம். ஆனால் அதன் உண்மை நிலை கண்டறியப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top