ஜெயேந்திரர் அடக்கம் செய்யும் முறை இதுதான்!
தீவிர ஏற்பாடுகளில் சங்கரமடம்!
நேற்று மரண்மான காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி ஜெயேந்திரர்
உடல் சங்கரமடத்தில்
அடக்கம் செய்யப்பட
உள்ளது. இதற்காக
தீவிர ஏற்பாடுகள்
நடந்து வருகின்றன.
இறுதிச்
சடங்கின் போது
ஜெயேந்திரர் மோட்சம் அடைவதற்காக முத்திநாத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சாலகிராமை அவர் தலைமீது
வைத்து அபிஷேகம்
செய்வார்களாம்.
மடத்தின்
சார்பாக மாணவர்களும்
ஆசிரியர்களும் அனைத்து மந்திரங்களும், வேதங்களையும் ஓதுவார்கள்.
பிறகு சங்கரமடம்
பிருந்தாவனம் பகுதியில் உள்ள ஆதிசங்கரர் அடக்கம்
செய்த இடத்தில்
அடக்கம் செய்ய
இருக்கிறார்கள்.
ஆதிசங்கரருக்கு
இடது பக்கத்தில்
பூஜைகள் செய்யப்பட
உள்ளன. காலை
எட்டு மணியிலிருந்தே
இதற்கான நிகழ்வுகள்
தொடரும். இந்த
நிகழ்வில், மோட்ச தீபம், நெய் தீபம்
ஆகியவை ஏற்றி
வழிபாடு செய்யப்படும்.
சங்கரமடம்
பிருந்தாவனத்தில் உள்ள ஆதிசங்கரருக்கு அருகில் ஏழு
அடி சதுர
பரப்பளவில், ஏழு அடி ஆழத்திற்கு பள்ளம்
தோண்டப்பட்டுள்ளது. சுற்றிலும் செங்கற்கலால்
சுவர் எழுப்பி
இருக்கிறார்கள்.
பெரிய
மூங்கில் கூடை
ஒன்றையும், சந்தன நாற்காலி ஒன்றையும் இரவோடு
இரவாக தயார்
செய்து இருக்கிறார்கள். பெரிய மூங்கில் கூடையில்
சந்தன நாற்காலியில்
அமர்ந்த நிலையில்
ஜெயேந்திரரை அமந்த நிலையில் வைப்பார்கள். பின்பு
அதில் வசம்பு,
உப்பு, சந்தனக்கட்டை
ஆகியவற்றை கொண்டு
உடலை மறைப்பார்கள்.
எஞ்சியுள்ள இடத்தில் மணலை கொட்டி மூடுவார்கள்.
முழுமையாக உடல்
மறைந்ததும் சிமெண்ட் கலவையால் பூசிவிடுவார்கள். அதைத்தொடர்ந்து மேல்பக்கம் ஆதிசங்கரருக்கு இருப்பது
போலவே சமாதியை
அமைக்க உள்ளார்களாம்.
காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை ஸித்தியடைந்தார்.
அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரை நல்லடக்கம் செய்தவற்கான இறுதி சடங்கு துவங்கியுள்ளது.
'மகா பெரியவர்' என அழைக்கப் படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், 'பிருந்தாவனம்' அருகிலேயே, ஜெயேந்திரரும், இன்று காலை, நல்லடக்கம் செய்யப்படுகிறார்.
0 comments:
Post a Comment