இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
திடீர் இராஜினாமா!

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ
இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவரின் பதவி காலம் தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இருந்தது.
எனினும் எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதியிலிருந்து தாம் பதவிவிலகுவதாக அவர் தனது இராஜினாமா கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்ததாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவி விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின்னர் பிரித்தானியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமாரி விஜேவர்தன உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய பிரித்தானிய தூதரகத்திற்கான பாதுகாப்பு பொறுப்பதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.



இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியால் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது, அவர்களை நோக்கி தனது கழுத்தை காண்பித்து சைகை செய்தமை தொடர்பில், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
பின்னர், அவரை கடமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின்பேரில் அவர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
 இந்த நிலையில், இராணுவ  அதிகாரி பிரிகேடியர் பிரியங்க  பெர்னாண்டோ கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனை விடுத்து அவருக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கையோ விசாரணையோ  முன்னெடுக்கப்படாது என்று இராணுவப் பேச்சளார்  பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top