மட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன்
மட்டக்களப்பு
மாநகர சபை
முதல்வராக தியாகராசா
சரவணபவனை நியமிக்க
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
மட்டக்களப்பு
மாநகரசபையில் அதிகளவு ஆசனங்களில் வெற்றி பெற்ற
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு அங்கு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இதற்கமைய,
மாநகர முதல்வரைத்
தெரிவு செய்வது
தொடர்பாக, தமிழ்
அரசுக் கட்சியின்
செயலாளர்
துரைராஜசிங்கம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதன்போதே,
மட்டக்களப்பு மாநகர முதல்வர் பதவிக்கு தியாகராசா
சரவணபவனை முன்மொழிவது
என்று ஒருமனதாக
தீர்மானிக்கப்பட்டது.
இவர்,
கல்லடி- 13ஆவது
வட்டாரத்தில் இருந்து மட்டக்களப்பு மாநகரசபைக்கு அதிகப்படியான
பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டார்.
48 வயதுடைய
தியாகராசா சரவணபவன்,
1971ஆம் ஆண்டு
தொடக்கம், 1973ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு
மாநகர முதல்வராக
பதவி வகித்த
கந்தையா தியாகராசாவின்
மகனாவார்.
அதேவேளை,
பிரதி முதல்வர்
பதவிக்கு ரெலோவைச்
சேர்ந்த ஒருவருக்கு
வழங்குவதெனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.