நல்லாட்சி அரசின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம்

..சு.மு. அமைச்சர்களில் விரைவில் மாற்றம்

நல்லாட்சி அரசின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, உரையாற்றிய ஜனாதிபதி அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் தனது கொள்கைகளை மேம்படுத்தி, அதன் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும், என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டு மக்களும், நாடுமே, தனது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக அது அறிவித்துள்ளது.
அந்த வகையில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 10 அமைச்சுகளில் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலும் விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


அமைச்சர்கள்:
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சட்டம் ஒழுங்குகள் அமைச்சர்
லக்ஷ்மன் கிரியெல்ல: அரச நிறுவனங்கள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
கபீர் ஹாசீம்: உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்
ஹரின் பெர்னாண்டோ: டிஜிட்டல்உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டலுவல்கள்
ரவீந்திர சமரவீர: வனவிலங்குள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி
சாஹல ரத்னாயக்க: இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி
இராஜாங்க அமைச்சர்கள்
பியசேன கமகே: இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி
அஜித்.பி.பெரோ: சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு
கலாநிதி ஹர்ஷ டி சில்வா: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரம்
பிரதியமைச்சர்
ஜே.சி. அலவத்துவல: உள்நாட்டலுவல்கள்




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top