பசிலுக்கு எதிரான ரூ. 36.5 மில்லியன் மோசடி வழக்குவழக்கு
ஜூன் 4 ஆம் திகதி முதல் விசாரணைக்கு
திவிநெகும திணைக்களத்திற்குரிய, ரூபா 36.5 மில்லியன் நிதி அரசாங்க
நிதியை பயன்படுத்தி,
தேர்தல் பணிகளுக்காக
கல்வனைசுப்படுத்தப்பட்ட இரும்புக் குழாய்களை
(Galvanized Iron Pipe) விநியோகித்த குற்றச்சாட்டு தொடர்பிலான
தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கான திகதி இன்று (23) அறிவிக்கப்பட்டது.
முன்னாள்
அமைச்சர்
பசில் ராபக்ஸவுக்கு எதிராக
தாக்கல் செய்யப்பட்டுள்ள
வழக்கை, எதிர்வரும்
ஜூன் மாதம்
4 ஆம் திகதி
முதல் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளவுள்ளதாக, கொழும்பு மேல்
நீதிமன்ற நீதிபதி
ஏ.ஏ.ஆர். ஹெயியன்துடுவ
உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின்
சாட்சியாளர்கள் அன்றைய
தினம் நீதிமன்றில்
முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த
ஜனாதிபதி தேர்தலின்
போது, 365 இலட்சம்
ரூபாய் பெறுமதியான
ஜீ.ஐ.சி குழாய்
விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே,
முன்னாள் அமைச்சர்
பசில் ராபக்ஸ
உள்ளிட்ட இருவருக்கு எதிராக, குறித்த
வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் (FCID) குறித்த நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment