அம்பாறைக்கு விரைந்த அமைச்சர் றிசாத்
பாதிக்கப்பட்ட பள்ளிவாசலைப் பார்வையிட்டதுடன்
மக்களிடம் விபரங்களையும் கேட்டறிந்தார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழு சற்றுமுன்(28) அம்பாறை நகரில் பாதிக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு நேரடியாக வருகை தந்து நடைபெற்ற அட்டூழியங்களைக் கண்டறிந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களிடம் விபரங்களையும் கேட்டறிந்தார் .
நேற்று அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதும், பள்ளிவாயல், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்கப்பட்டது. இதனைத்தொடந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் பிரதமரிடம் எத்திவைத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பில் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சரவையில் வலியுறுத்தியதோடு இது ஒரு திட்டமிட்ட முஸ்லிம்களுக்கெதிரான சதி நடவடிக்கையெனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
நேற்று காலை அமைச்சரவை கூடிய போது அம்பாறை நாசகார நடவடிக்கை தொடர்பில் ,
”பொலிசார் நினைத்திருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம், அவர்கள் அசமந்தப் போக்குடனேயே இருந்துள்ளனர். அத்துடன் அவர்கள் முன்னிலையிலேயே மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன” இவ்வாறு சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இனவாதிகள் மீண்டும் எதனையோ இலக்காகக் கொண்டு இந்தக் காரியத்தை தொடங்கியுள்ளனர். இதனை அவர்கள் ஆரம்பமாகவே கருதிச் செயற்பட்டுள்ளனர் என்றும் மேலும் குறிப்பிட்டார்.
சேதத்திற்குள்ளாக்கப்பட்ட பள்ளிவாசல், அதனோடு ஒட்டியிருந்த கடைகள் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியிருந்தார்.
அமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி, தானும் பிரதமரும் இது தொடர்பில் பேச்சு நடாத்தியதாகவும் இது தொடர்பில் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதே வேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு இந்த நாசகார நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை உடன் கைது செய்யுமாறும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில்,நேற்று மாலை உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைய முற்பட்டாலும் காலநிலை சீரில்லாத நிலையினால் அங்கு செல்ல முடியவில்லை. இதனைத்தொடந்து இன்று காலை அப்பிரதேசத்தின் நிலையை அறிய விசேட வாணூர்த்தி மூலமாக அமைச்சர் குழுவினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்றிருந்தனர்.
குறிப்பாக அப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம் பள்ளிவாயல் மீது தாக்குதல் மேற்கொண்டதையும் வர்த்தக நிலையங்கள் தாக்குதல் மேற்கொள்ளும் இடங்களை பார்வையிட்டு உடனடியாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் நடவடிக்கை மேற்கொள்ளவே விரைந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி. ஹசன் அலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அமைச்சரின் விஜயத்தில் பங்குகொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment