55 இலட்சம் ரூபா பெறுமதியான
10 தங்க கட்டிகளுடன்
மதுரை செல்ல இருந்த 3 இந்தியர் கைது
ரூபா
55 இலட்சம் பெறுமதியான 10 தங்க கட்டிகளுடன் இந்திய
பிரஜைகள் மூவர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த
மூவரும் நேற்று
(22) பிற்பகல் SG 004 எனும் இந்திய
தனியார் விமான
சேவை விமானம்
மூலம் கட்டுநாயக்க
விமான நிலையத்திலிருந்து
இந்தியாவின் மதுரை நோக்கி பயணிக்க இருந்த
நிலையில், இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளனர்.
48, 52, 52 வயதுடைய குறித்த
சந்தேகநபர்களால் கொண்டு வரப்பட்ட கைப்பையை X கதிர்
சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அதில் மறைத்து
வைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள்
அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,
மேற்கொண்ட சோதனையில்
சுமார் 100 கிராம் கொண்ட 10 தங்கக் கட்டிகள்
காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன்
மொத்த நிறை
916.25 கிராம் எனவும் அதன் பெறுமதி ரூபா
5,497,500 எனவும் கணக்கிடப்பட்டுள்ளதாக சுங்க
திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய
தெரிவித்துள்ளார்.
சுங்கத்திணைக்களத்தின்
பணிப்பாளர் ஓ.எம். ஜாபிரின் உத்தரவுக்கமைய,
இது தொடர்பான
மேலதிக விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.