நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மும்பையில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை இரவு டுபாயில் மரணமடைந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவு சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தடயவியல் சோதனைக்குப் பின்னர் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு நேற்றிரவு அவரது உடல் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டது. 4 நாள்களுக்குப் பிறகு, இந்தியா கொண்டுவரப்பட்ட அவரது உடல் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் என இந்திய சினிமா நட்சத்திரங்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்குப் பின் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய தேசியக் கொடியை அவர் உடல்மீது போர்த்தி அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு மரியாதைக்குப் பின்னர் யாரும் பார்த்திடாத வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அந்தேரியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள பார்லி பில்லே பகுதியில் மயானத்துக்குச் சென்ற இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
0 comments:
Post a Comment