ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்;
ஆயிரகணக்கானோர் பங்கேற்பு

டுபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். முன்னதாக, அவரது உடலுக்கு ஆயிரகணக்கான ரசிகர்கள், அஞ்சலி செலுத்தினர்.
நடிகை ஸ்ரீதேவி, 54, வளைகுடா நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின், டுபாய் நகரில் நடந்த, உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்று இருந்தார். திருமணம் முடிந்ததும், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர், 24ம் திகதி இரவு, மாரடைப்பால் உயிரிழந்ததாக, தகவல் வெளியானது.
இதையடுத்து, அவரது உடல், டுபாயில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும், ஹொட்டலின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவர், அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்ததாகவும், அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஸ்ரீதேவியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரது உடலை, மும்பை எடுத்து வருவதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஸ்ரீதேவி மரணத்தில், பல சந்தேகங்கள் இருப்பதாக, டுபாய் அரசு வழக்கறிஞர் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.அவரது கணவர், போனி கபூரிடமும், உறவினர்களிடமும், டுபாய் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்றும் விசாரணை தொடர்ந்தது. பின், ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு விட்டதாகவும், அரசு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதன்பின், நேற்று மாலை, ஸ்ரீதேவியின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின், 'எம்பாமிங்' எனப்படும், உடல் அழுகாமல் இருப்பதற்கான, பதப்படுத்தும் பணி முடிந்து, தனி விமானம் மூலம், இரவில் மும்பை எடுத்து வரப்பட்டது. மும்பையில், ஸ்ரீதேவியின் வீடு அருகே உள்ள மைதானத்தில், இன்று காலை, 9:30 மணி முதல், பகல், 12:30 மணி வரை, அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதன்பின், மாலை, 3:30 மணிக்கு, விலே பார்லேயில் உள்ள மின் மயானத்தில், அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பிரபல நடிகர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள ரசிகர்களும், மும்பையில் குவிந்து உள்ளனர்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top