2ஆம் திகதிக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்கள்
உறுப்பினர்களின் எண்ணிக்கையை
தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும்
விகிதாசார முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்காக பெயரிடப்பட்டுள்ள
50 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சிகளுக்கு,
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர்களையும் உப தலைவர்களையும் அறிவிக்கலாம். அடுத்த மாதம்
நான்காம் அல்லது ஐந்தாம் திகதி இந்த நடவடிக்கை இடம்பெறுவது அவசியமாகும்.
பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை எதிர்வரும் மார்ச்
2 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பெற்றுத்தர வேண்டும் என அரசியல் கட்சிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்
மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்கள்
உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும். இந்தப் பட்டியல்
அடுத்த மாதம் 3ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
உள்ளுராட்சி
மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்களை
கட்சிகளின் செயலாளர்கள் அறிவித்திருப்பதாக
தேர்தல் ஆணைக்குழுவின்
தலைவர் மஹிந்த
தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
தெரிவு
செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாக
மேலும் 364 உறுப்பினர்களை அறிவிப்பது அவசியமாகும். இந்தத்
தேர்தலில் 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு
இதில் 535 பேர்
பெண்களாவர்.
இந்த தேர்தல் மூலம் அனைத்து வட்டாரத்திலும் 5 சதவீதத்திற்கு குறைவான வாக்குவீதத்தை பெற்ற
அனைவரதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படுமா என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு
பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர் ஆம் என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment