இடமாற்றலாகிச்சென்ற வைத்தியர்களின்
சம்பளப்பணத்தை நான்கு வருடங்களாக
மோசடி செய்து பெற்று வந்த
பெண் ஊழியர் வசமாக சிக்கியுள்ளார்
அம்பாறையில் சம்பவம்
இடமாற்றலாகிச்சென்ற வைத்தியர்களின்
சம்பளப்பணத்தை நான்கு வருடங்களாக சூட்சுமமான
முறையில் மோசடி செய்து பெற்று
வந்த சுகாதாரத்திணைக்கள
பெண் ஊழியரொருவர் வசமாக
சிக்கியுள்ளார்.
இவ்வாறு ஒரு கோடியே
10இலட்சம் ரூபாவை மோசடி செய்திருப்பதாக ஆரம்ப கட்ட
விசாரணைகளிலிருந்து
தெரியவந்துள்ளது. விசாரணையின்போது தான்
இம்மோசடியை
செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இத்துணிகர
பணமோசடி அம்பாறை பிராந்திய
சுகாதார சேவைகள் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இடமாற்றலாகிச்சென்ற 5 வைத்திய அதிகாரிகளினது சம்பளப்பணத்தை
அம்பாறை நகரிலுள்ள ஐந்து வெவ்வேறு வங்கிக் கிளைகளில் தனது கணவரின் பெயரில் திறக்கப்பட்ட வங்கிக்
கணக்கிற்கு கடந்த நான்கு
வருடங்களாக
அனுப்பிவந்துள்
ளார்.
இப்பெரும் மோசடியைச்
செய்த அப்பெண்மணி
வேறொரு கல்வி வலயத்தில்
முன்னர் பணியாற்றி இடமாற்றலாகி
கடந்த 2013 முதல் சுகாதாரப்
பணிமனை யில்
கடமையாற்றி வந்துள்ளார்.
இவரது கணவர் இராணுவத்திலிருந்து தப்பி
வந்தவரென்று
விசாரணைகளிலிருந்து
தெரியவருகின்றது.
கிழக்கு
மாகாண பிரதம கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட
விசாரணைகளில்
முதற்கட்டத்தில் 95 இலட்சமென அறியவந்தபோதிலும் அடுத்தகட்ட விசாரணையின்போது இத்தொகை
ஒருகோடியே 10 இலட்சம்
ரூபாவைத் தாண்டுவதாக பிரதம
கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார்.
தான்
கட்டிய மாடி வீட்டின்
புதுமனை புகுவிழாவிற்காக அலுவலகத்தில்
விடுமுறை எடுத்திருந்தவேளை அக்காலப்பகுதி சம்பளம்வழங்கும்
காலமாகையால் தற்காலிகமாக வேறொரு அலுவலரை அதற்கு
பணிக்கமர்த்தியவேளை இம்மோசடி அம்பலத்திற்கு
வந்ததாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
தனது
புதுமனை குடிபுகுந்த அன்றே அவர்
சிக்கியுள்ளார். பொலிஸ்
வீட்டுக் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. விசாரணையின்போது 2013 முதல் 2017 டிசம்பர் வரை தான் மோசடி
செய்த பணத்தை மீளச்செலுத்துவதாக அந்த
பெண் ஊழியர் ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை
முன்னெ டுத்துச் செல்லப்படுவதாக
அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment