கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ள மாகாண சபைத்
தேர்தலில் முகம் கொடுக்க உத்தேசித்துள்ளோம்.
எவ்வாறு அபிவிருத்தியைச் செய்ய முடியும்
இன ஒற்றுமையை எவ்வாறு கொண்டுவரமுடியும்
என்பதை செயல்படுத்தி முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்று மூன்று இனங்களும் வாழ்கின்ற அந்த மாகாணத்தில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கமாகும். மாகாண ஆட்சியில் எவ்வாறு பிரதேசங்களை அபிவிருத்தியைச் செய்ய முடியும் எவ்வாறு இன ஒற்றுமையை அந்த மக்களிடையே கொண்டுவரமுடியும் என்பதை செயல்படுத்தி முன்னெடுக்க எண்ணியுள்ளோம். இவ்வாறு அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்து,
நேற்று 20 ஆம் திகதி மாலை கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற
செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு மேலும் தெரிவித்ததாவது,
இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) எதிர்காலத்தில் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சகோதரர் எம்.ரி. ஹஸனலி தலைமயிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஏனைய எமது சகோதர சமூகத்தவர்களையும் இணைத்துக் கொண்டவர்களாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முகம் கொடுக்க உத்தேசித்துள்ளோம்.
மாகாண சபைத் தேர்தலில் புதிய மாற்றங்க்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த
மாற்றம் இந்த நாட்டைக் குட்டிச் சுவாராக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
சிறுபான்மை சமூகத்தை குறிப்பாக சிறிய கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற
நோக்கத்தில்தான் புதிய உள்ளூராட்சி தேர்தல் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். அது
இன்று இந்த நாட்டில் சபைகளை அமைக்க முடியாத ஒரு துர்ப்பாக்கைய நிலையை
ஏற்படுத்தியுள்ளது.
அரைவாசிக்கு மேற்பட்ட சபைகளை எவ்வாறு அமைப்பது யாரோடு இணைந்து அமைப்பது என்று
தெரியாமல் தத்தளிப்பதை நாம் பார்க்கின்றோம்.
இந்த நல்லாட்சியைக் கொண்டு வந்தது தேர்தல் முறையை மாற்றுவதற்காக அல்ல. இந்த
நல்லாட்சியில் மக்கள் பல முன்னேற்றகரமான நல்ல பல விடயங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மாகாண சபை விடயமாக அதில் மாற்றத்தைக்கொண்டுவரும் முயற்சியை ஜானாதிபதியும்
பிரதமரும் உடனடியாகக் கைவிடல் வேண்டும். மாகாண சபைத் தேர்தல் முறையை பழைய முறையில்
முன்னெடுத்துச் செல்ல எதிர்கட்சித் தலைவர் உட்பட சகல கட்சித் தலைவர்களின்
ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
இது போன்று பாராளுமன்ற தேர்தல் முறைகளையும் மாற்றும் நடவடிக்கைகைகளையும்
உடனடியாகக் கைவிடல் வேண்டும். இந்த நாட்டில் இருக்கின்ற 1977 ஆண்டுக்குப் பிறகு
வந்த தேர்தல் முறைகள்தான் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவங்களை
பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றில் கண்டோம். எனவே,
இந்த தேர்தல் முறை தொடர வேண்டும் என்பதுதான் எமது வேண்டுகோள்.
இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) எதிர்காலத்தில் எமது
கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சகோதரர் எம்.ரி. ஹஸனலி தலைமயிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளையும்
இணைத்துக் கொண்டு ஏனைய எமது சகோதர சமூகத்தவர்களையும் இணைத்துக் கொண்டவர்களாக
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில்
முகம் கொடுக்க உத்தேசித்துள்ளோம்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்று மூன்று
இனங்களும் வாழ்கின்ற அந்த மாகாணத்தில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்துவதுதான் எங்களின்
பிரதான நோக்கமாகும்.
மாகாண ஆட்சியில் எவ்வாறு பிரதேசங்களை அபிவிருத்தியைச் செய்ய
முடியும் எவ்வாறு இன ஒற்றுமையைக் கொண்டுவரமுடியும் என்பதை செயல்படுத்தி முன்னெடுக்க
எண்ணியுள்ளோம்.
எங்களின் இந்த நல்ல முயற்சிக்கு மக்களின் ஆதரவுகளையும் பிரார்த்தனைகளையும்
ஆசிர்வாதங்களையும் எதிர்பார்த்து இருக்கின்றோம்.இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
தெரிவித்தார்.
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment