கைத்தறி , ஆடை உற்பத்தித் துறைகளுக்கு
சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதழ்கள்
அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவிப்பு



விவசாயம் மற்றும் ஆடை உற்பத்தித்துறைகளில் பாடநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கொண்ட தொழில்பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் றிஷாத்; பதியுதீன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கைத்தறி மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனம் வழங்கும் சான்றிதழுக்கு மேலதிகமாக சர்வதேச அங்கீகாரம் கொண்ட சான்றிதழ் வழங்கப்படவிருக்கிறது.
வதிவிட வசதிகளுடன் கூடிய கைத்தறி மற்றும் ஆடை உற்பத்திப் பயிற்சி தொடர்பான 14 கல்லூரிகளும், வடிவமைப்பு தொடர்பான இரண்டு கல்வி நிறுவனங்களும் காணப்படுகின்றன.
இலவசமான முறையில் பாடநெறிகளை தொடரும் வாய்ப்பு மாணவர்களுக்குக் காணப்படுகிறது. இந்த ஆண்டில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த பாடநெறிகளுக்காக பதிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு மாணவருக்கும் நாளாந்தம் 100 ரூபா கொடுப்பனவும், சீருடையும் இலவசமாக வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top