ஜனாதிபதி இன்று பாராளுமன்றம் வருகை



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான, மறைந்த பேராசிரியர் விஷ்வ வர்ணபால தொடர்பான அனுதாப பிரேரணை இன்று (22) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த விவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
இதன்போது, தனது உரையில் கருத்துத் தெரிவித்த அவர், ஒரு அரசியல்வாதியாக மாத்திரமன்றி, கல்வியயலாளர், புத்திஜீவியாக, தனக்கு வழங்கப்படும் அனைத்து பொறுப்புகளின்போதும், அரசியல், கட்சி பேதமின்றி தனது பொறுப்புகளை மேற்கொண்ட பேராசிரியர் விஷ்வ வர்ணபால அவர்கள், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட புத்திஜீவி என்பதோடு, உண்மையான மனிதாபிமானி என தெரிவித்தார்.
அவர் இந்த நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என தெரிவித்த ஜனாதிபதி, அரசியலை பின்தொடரும் ஊழலை தவிர்த்த அரசியல்வாதி எனும் வகையில், அவர் உயர்ந்த இடத்தை பிடிக்கிறார் எனவும் சுட்டிக்காட்டினார்.
அவரது அறிவு, கல்வி மற்றும் திறமைகளுக்கு அமைய, கடந்த அரசாங்கத்தில் அவருக்கு உரிய இடம் வழங்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆயினும் உண்மையான மனிதாபிமானியாக, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தனது கடமையை சரிவர நிறைவேற்றிய மூத்த அரசியல்வாதி அவராவார் என தெரிவித்தார்.
1936 இல் (டிசம்பர் 26) பிறந்த முன்னாள் அமைச்சர் விஷ்வ வர்ணபால, உயர் கல்வி அமைச்சராகவும் (2007 - 2010) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளராகவும் (2015 - 2016) பதவி வகித்தார்.
அவர் கடந்த 2016 பெப்ரவரி 27 ஆம் திகதி தனது 79 ஆவது வயதில் காலமானார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top