நடிகை ஸ்ரீதேவி காலமானார்
ஸ்ரீதேவி
(Sridevi, 13 ஆகத்து 1963 - 24 பெப்ரவரி 2018) தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.[3] கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார்.
கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் மிகச்சிறந்த பொலிவூட் நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி மரணமடைந்துவிட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
54 வயதுடைய ஸ்ரீதேவி டுபாயில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது மாரடைப்பினால் மரணமுற்றதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்திவெளியிட்டுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர்
நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம்
வரை சென்று தன் காலடியைப் பதித்தவர்.
ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் டுபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி
ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய
உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்,
மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரண செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் உறுதி
செய்துள்ளது.
ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர்
ஸ்ரீதேவி. அவர் நடித்த 16 வயதினிலே, மூன்றாம் பிறை போன்றவை முக்கியமானப் படங்கள். திருமணத்திற்குப்
பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ்
என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனார். பத்மஸ்ரீ, ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
அவருடைய மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பாகும்.
நடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிகழ்வு இறப்பதற்கு முன் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் |
0 comments:
Post a Comment