உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளின்
பட்டியல் பிரதிநிதி கணக்கெடுப்பில் பிழை
டலஸ் அழகப் பெரும தெரிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளின் கணக்கெடுப்பில் பாரிய பிழை உள்ளது. பட்டியல் மூலமான பிரதிநிதிகள் கணக்கெடுப்பில் முழு அளவில் பிழை நிகழ்ந்துள்ளது. அப்பிழை திருத்தப்படுமிடத்து மூன்று கட்சிகள் இரு நூற்றிற்கும் அதிகமான ஆசனங்களை இழக்க வேண்டி வருவதுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மேலும் 37 தொகுதிகள் கிடைக்கவுள்ளன.
எனவே நிகழ்ந்துள்ள பிழை திருத்தப்பட வேண்டும். அல்லாது போனால் கூட்டு எதிர்க்கட்சி நீதிமன்றத்தை நாடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என். எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்து இரு வாரங்கள் கடந்துள்ளன. எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கு இன்னும் இரு வார காலம் தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
தேர்தலின் பின்னர் பட்டியலுக்குரிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அரசாங்கம் அவசரமாக்க கொண்டுவந்து நிறைவேற்றிய திருத்தத்தின் மூலமே குறித்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கட்டுப்பணத்தை இழந்த கட்சிகளுக்கும் ஆசனம் கிடைத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment