சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் மகனின்
அலரி மாளிகை திருமணம்!

நல்லாட்சி அரசாங்கம் மக்கள் பணத்தைக் கொண்டு திருமண விருந்துபசாரங்களில் ஈடுபட்டு வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மேலும் கூறுகையில்,
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன், நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவின் திருமண நிகழ்வு அலரி மாளிகையில் நடத்தப்பட்டது.
ஆட்சியாளர்கள் மக்கள் பணத்தைக் கொண்டு திருமண நிகழ்வுகளை நடத்துகின்றனர்கள் என்பது இதன் மூலம் புலனாகியுள்ளது.
சாதாரண பொதுமக்கள் கடன் பெற்றுக் கொண்டோ அல்லது சொந்த பணத்திலோ தங்களது திருமண வைபவங்களை நடாத்துகின்றனர்.
எனினும், அரசாங்கத் தலைவர்கள் திருமண நிகழ்வுகளையும் கூட மக்கள் பணத்தைக் கொண்டு நடத்துகின்றனர்.
சதுர சேனாரத்னவின் திருமண நிகழ்வு தொடர்பில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க பிரதமர் அலுவலகத்திடம் இது பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அலரி மாளிகையில் விழா மண்டபம் உண்டா?
அதற்கான கட்டணம் எவ்வளவு?
இதற்கு முன்னர் மண்டபம் வாடகைக்கு விடப்பட்டதா?          
உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அலரி மாளிகையில் நடத்தப்பட்ட சதுர சேனாரத்னவின் திருமணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top