அமல் கருணாசேகர கொடுத்த
தகவல்களின் அடிப்படையில்
கோத்தாவிடம் இன்று விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளலர் கோத்தாபய ராஜபக்ஸவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாகும்படி, கோத்தாபய ராஜபக்ஸவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கீத் நொயார் கடத்தல் தொடர்பாக கோத்தாபய ராஜபக்ஸவிடம், விசாரணை நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
கீத் நொயார் கடத்தல் வழக்கு கடந்த திங்கட்கிழமை கல்கிசை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி இரவு கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் நடந்த காலப்பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடந்த திங்கட்கிழமை ரூபா ஒரு கோடி கொண்ட 3 சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்..
விசாரணைகளின் போது அவர் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே, கோத்தாபய ராஜபக்ஸவிடம் இன்று விசாரணைகள் நடத்தப்படும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top