ஒரு
பூஜ்ஜியத்தால் பெண்ணுக்கு அடித்த அதிஷ்டமும்!
பின்னர் ஏற்பட்ட சோதனையும்
காலியில்
உள்ள நிதி நிறுவனம் ஒன்றிடம்
கடன் பெற்ற பெண் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
தவறான
முறையில் 3,60,000 ரூபாய் பணம் பெற்றுக்
கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அந்த
பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த
பெண் நிதி நிறுவனத்தில் 40,000 ரூபாய்
கடன் கோரியுள்ளார். ஆனாலும் நிறுவன ஊழியர்களின்
தவறு காரணமாக அந்த பெண்ணுக்கு
400,000 ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
கடன்
பணம் வழங்கப்பட்டதன் பின்னர் கணக்கெடுக்கும் நடவடிக்கையினை
குறித்த நிதி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதன்போது
அந்தப் பெண்ணுக்கு ஒரு பூஜ்ஜியம் அதிகமாக
எழுதியமையினால் 400,000 ரூபா பணம் வழங்கப்பட்டமை
தெரியவந்துள்ளது.
கடன்
பணத்தை தவிர்த்து மீதி பணமான 360,000 ரூபாவை
மீள வழங்குமாறு நிதி நிறுவனம் கேட்டுக்
கொண்ட போதிலும் குறித்த பெண் அதனை
நிராகரித்துள்ளார்.
இது
தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் நிதி
நிறுவன அதிகாரிகள் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டிற்கமைய குறித்த பெண் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த
பெண் மேலதிகமாக கிடைத்த பணத்தை அதிஷ்டமாக
கிடைத்ததென கூறி அவர் நினைத்தது
போன்று செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment