ஜப்பான் அனுப்புவதாகக் கூறி
இளைஞர் யுவதிகளிடமிருந்து லட்சக்கணக்கான
பணத்தை ஏமாற்றி சிக்கிய முகவர் நிறுவனம்!

ஜப்பான் அனுப்புவதாகக் கூறி இளைஞர் யுவதிகளிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை ஏமாற்றிய ஏஜென்சி நிறுவனமொன்று சிக்கியுள்ளது.
ஹோமாகம கலவிலவத்த பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமொன்றே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானைச் சேர்ந்த நபரொருவர், ஜப்பானில் வேலை வாய்ப்புப் பெற்றுத்தரமுடியும் எனக் கூறி இளைஞர் யுவதிகளிடமிருந்து 3 லட்சம் ருபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர்கள் நேற்று குறித்த நிறுவனத்தை முற்றுகையிட்ட போதே இவர்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது நிறுவனத்தை நடத்திச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டு ஹோமாகம நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top