திருத்தமின்றி சமர்ப்பிக்கப்படும்
புதிய அரசமைப்புக்கான நகல் வரைவு
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
அரசமைப்பு
உருவாக்கத்துக்கு நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவிற்கு ஆலோசனை
வழங்கும் நிபுணர்
குழு சமர்ப்பித்துள்ள
அரசமைப்புக்கான நகல் வரைவில் திருத்தங்கள் எதனையும்
மேற்கொள்ளாமல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க
முடிவு செய்யப்பட்டுள்ளதாக
வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வழிநடத்தல்
குழுவின் கூட்டம்
கடந்த வியாழக்கிழமை
இடம்பெற்ற போது
இந்த தீர்மானம்
ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த
நிலையில் குறித்த
கூட்டம் தொடர்பில்
இன்று கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
10 பேர்
கொண்ட நிபுணர்
குழுவினால் அரசமைப்பு வரைவுக்கான நகல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதனை அப்படியே
சமர்ப்பிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அதனை
எவ்வாறான முறையில்
சமர்ப்பிப்பது என்பது தொடர்பில், இந்த மாதம்
3ஆம் வாரம்
இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வின் போது வழிநடத்தல்
குழு கூடி
தீர்மானிக்கும்.
நிபுணர்
குழு சமர்ப்பித்துள்ள
வரைவில், அரசமைப்பின்
ஒவ்வொரு உறுப்புரைகள்
தொடர்பில் கட்சிகளின்
நிலைப்பாடுகள், அந்த உறுப்புரையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
சில
விடயங்களில் நிபுணர்களும் தங்களின் கருத்துக்களைப் பதிவு
செய்துள்ளார்கள். அரசமைப்பு நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கும்
போது அரசமைப்பு
வரைவாகவே சமர்ப்பிக்கவுள்ளோம்.
இதனால்,
கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் நிபுணர் குழுவின்
கருத்துக்களை பின்னிணைப்பாக இணைத்துக் கொள்ள முடிவு
செய்யப்பட்டது.
அறிக்கையின்
தமிழ் மற்றும்
சிங்கள மொழிபெயர்ப்புப்
பணி இன்னமும்
முடிவடையவில்லை. அந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர்,
அவற்றையும் ஆராய்வோம்.
இந்த
மாதம் மூன்றாம்
வாரத்தில் கூடும்
வழிநடத்தல் குழு இவற்றை இறுதி செய்து,
அரசமைப்பு நிர்ணய
சபைக்கு சமர்ப்பிக்கும்
திகதியைத் தீர்மானிக்கும்
என தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment