இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின்
பிரத்யேக பல் மருத்துவரின் மகன்
பாகிஸ்தான் புதிய ஜனாதிபதியாக தெரிவு
- சுவாரஸ்ய தகவல்
பாகிஸ்தானின்
புதிய ஜனாதிபதியாக
தெரிவு செய்யப்பட்டுள்ள
ஆரிப் ஆல்வியின்
தந்தை , முன்னாள் இந்தியப் பிரதமர் நேருவின் பிரத்யேக
பல் மருத்துவர்
எனும் தகவல்
வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான்
ஜனாதிபதி மம்னூன்
உசேனின் ஐந்தாண்டு
பதவிக்காலம் செப்டம்பர் 9-ம் திகதியுடன் நிறைவடைவதால்
அந்த பதவிக்கு
நேற்று
தேர்தல் நடைபெறறது.
சமீபத்தில்
நடைபெற்ற பாராளுமன்ற
தேர்தலில் அதிக
இடங்களை பெற்று
ஆட்சி அமைத்துள்ள
இம்ரான் கான்
தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின்
ஜனாதிபதி வேட்பாளராக பல் மருத்துவரான டாக்டர்
ஆரிப் ஆல்வி
நிறுத்தப்பட்டார்.
தேர்தலில்
பதிவான 430 வாக்குகளில் டாக்டர் ஆரிப் ஆல்வி
212 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை
எதிர்த்து போட்டியிட்ட
ஜாமியத் உலமா
இ இஸ்லாம்
கட்சித்தலைவர் மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும்,
பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ்
அஹ்ஸன் 81 வாக்குகளையும்
பெற்றனர். இதனால்,
பாகிஸ்தான் நாட்டின் 13-வது ஜனாதிபதியாக ஆசிப் ஆல்வி
விரைவில் பதவி
ஏற்கவுள்ளார்.
இந்நிலையில்,
ஆரிப் ஆல்வியின்
தந்தை, சுதந்திர
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின்
பிரத்யேக பல்
மருத்துவராக பணி புரிந்தவர் என்று, ஆரிப்
ஆல்வியின் கட்சியான
தெஹ்ரிக் இ
இன்சாப் கட்சியின்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
அதில், குறிப்பிட்டுள்ளதாவது
:-
சுதந்திரத்திற்கு
முன்னர் இந்தியா
பாகிஸ்தான் பிரிவினை ஏற்படாமல் ஒன்றுபட்ட பாரதமாக
இருந்த போது
ஆரிப் ஆல்வியின்
தந்தையான ரகுமான்
எலஹி ஆல்வி,
ஜவகர்லால் நேருவின்
பிரத்யேக பல்
மருத்துவராக இருந்துள்ளார். அப்போது எலஹி ஆல்விக்கு
நேரு பல்வேறு
கடிதங்கள் எழுதியுள்ளார்.
அவை அனைத்தும்
அவரது குடும்பத்தினரால்
இன்றும் பத்திரமாக
பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால்,
பிரிவினைக்கு பிறகு கராச்சிக்கு குடிபெயர்ந்த எலஹி
ஆல்வி, அங்கேயே
பல் மருத்துவமனை
அமைத்து குடும்பத்துடன்
தங்கிவிட்டார். அங்கு 1947-ம் ஆண்டு பிறந்த
ஆரிப் ஆல்வி
50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அரசியலில் இறங்கிவிட்டார்.
பஞ்சாப்
பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கும்
போது பாகிஸ்தானின்
ராணுவ ஆட்சியாளராக
இருந்தவர் ஆயூப்
கான். அப்போது
அவரது ஆட்சிக்கு
எதிராக ஜமாத்-இ-இஸ்லாமி
எனும் மாணவ
இயக்கம் பெரும்
போராட்டங்கள் நடத்தியது.
மாணவ
இயக்கத்தின் தலைவராக வீரியத்துடன்
போராட்டங்களில் பங்கேற்றபோது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆரிப் ஆல்வியின் வலது தோல்
பட்டையில் குண்டு
பாய்ந்தது. அதன் தழும்பை வீரத்தின் அடையாளமாக
அவர் இன்றும்
குறிப்பிட்டு வருகிறார்.
அதன்
பிறகு அரசியலில்
படிப்படியாக முன்னேறி 2006-ம் ஆண்டு முதல்
2013-ம் ஆண்டு
வரை கட்சியின்
பொதுச் செயலாளராக
பதவி வகித்தார்.
பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினராக கடந்த 2013-ம்
ஆண்டு தேர்வு
செய்யப்பட்ட இவர், மீண்டும் 2018-ம் ஆண்டும்
உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
பல்வேறு
அரசியல் பணிகளுக்கு
இடையிலும் தந்தையைப்
போன்றே ஆரிப்
ஆல்வி தொழில்முறை
பல் மருத்துவராகவும்
தொடர்ந்து இருந்து
வருகிறார்.
இவ்வாறு
தெஹ்ரிக் இ
இன்சாப் கட்சியின்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரிப்
ஆல்வியின் குடும்பத்தை
போன்றே பாகிஸ்தானின்
முன்னாள் ராணுவ
ஆட்சியாளர் பர்வேஷ் முஷரப்பின் குடும்பமும் புதுடெல்லியில்
இருந்து கராச்சிக்கு
இடம் பெயர்ந்தவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment