சாக்கடையை சுத்தம் செய்த அமைச்சர்
   
எமது அண்டை நாடான இதியாவிலுள்ள காரைக்காலில் ஆய்வு பணிக்கு சென்ற அமைச்சர் ஒருவர் மண்வெட்டி வாங்கி சாக்கடையை சுத்தம் செய்யத்தொடங்கினார்.
மழைக்காலம் நெருங்குவதாலும், அண்டை மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாலும், காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் மந்தகரை முதல் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலான மெயின் சாலையில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்யவேண்டும் என அப்குதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் இரா. கமலக்கண்ணனிடமும் மக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். தொடர்ந்து, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரனிடம் சாக்கடையை உடனே சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் அப்பகுதியில் உள்ள சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இப்பணியில், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், அம்பகரத்தூர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுமார் 35 பேர் ஈடுபட்டனர்.
இப்பணியை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் கமலக்கண்ணன், திடீரென தானும் மண்வெட்டி வாங்கி சாக்கடையை சுத்தம் செய்யத்தொடங்கினார். சாக்கடை நீர் வேட்டியில் பட்டதால், வேட்டியை கழற்றிவிட்டு கால் சட்டையுடன் சாக்கடையில் இறங்கி நீண்ட நேரம் சுத்தம் செய்தார். இதை பார்த்த பொதுமக்களும் சாக்கடையை சுத்தம் செய்தனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top