இந்தோனேசியாவில் 1000 பேர் மாயம்
உயிரோடு புதைந்து இருக்கலாம் என அச்சம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 1000 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுனாமியின் போது அவர்கள் மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் பலு நகரில் கடந்த வாரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. அதில் பலு நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.
1,571 பேர் பலியானதாக இந்தோனேசிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 1000 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் மேலும் 1000 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுனாமியின் போது அவர்கள் மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சுனாமி தாக்குதலில் பலு நகரம் அழிந்த நிலையில் உள்ளது. பெரும்பாலான பகுதிகள் தரைமட்டமாகிவிட்டன. பெரும்பாலான ரோடுகள் சுனாமியில் அடித்து செல்லப்பட்டு விட்டன. அந்த நகரை சீரமைக்க 6 மாதம் முதல் ஒருவருடம் வரை ஆகலாம் என இந்தோனேசிய துணை ஜனாதிபதி ஜுசுப்கல்லா தெரிவித்துள்ளார். அதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment