மாருதி வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷன் வெளியானது
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷன் கார் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷன் காரில் வெளிப்புற ஸ்டைலிங் கிட், டபுள்-டின் ப்ளூடூத் மியூசிக் சிஸ்டம் மற்றும் ஸ்பீக்கர்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அம்சங்கள் தவிர, புதிய லிமிட்டெட் எடிஷன் வேகன்ஆர் மாடலில் அழகிய சீட் கவர்கள் மற்றும் ஆரஞ்சு அக்சென்ட்கள், சென்ட்டர் கன்சோல் மற்றும் டிரிம்களில் ஃபாக்ஸ்வுட் ஃபினிஷ், பிரீமியம் குஷன் சீட், பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பின்புறம் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு புதிய அம்சங்களால் வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷனின் இன்டீரியர் பிரீமியம் தோற்றம் கொண்டுள்ளது. புதிய வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷன் மாடலில் 998 சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
என்ட்ரி-லெவல் கார்களை வாங்குவோர் மத்தியில் பிரபலமான காராக மாருதி வேகன்ஆர் இருக்கிறது. மேலும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-5 கார்களில் ஒன்றாக மாருதி வேகன்ஆர் இருக்கிறது.
வேகன்ஆர் லிமிட்டெட் எடிஷன் இரண்டு வித உபகரணங்கள் அடங்கிய கிட் உடன் கிடைக்கிறது.
0 comments:
Post a Comment