துருக்கி நாட்டில் குடியேறிகள் வந்த
லாரி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

   
கிரீஸ் நாட்டுக்கு அடைக்கலம் தேடிசென்ற குடியேறிகளை ஏற்றிவந்த லாரி துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் இன்று கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.
மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகிவருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இத்தாலி நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடல்மார்க்கம் தவிர சாலை வழியாகவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளான நார்வே, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தஞ்சம் அடைய நூற்றுக்கணக்கான குடியேறிகள் தினந்தோறும் சென்றவண்ணம் உள்ளனர்.
அவ்வகையில், கிரீஸ் நாட்டுக்கு அடைக்கலம் தேடிசென்ற குடியேறிகளை ஏற்றிவந்த லாரி துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் இன்று கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு துருக்கியில் உள்ள இஸ்மிர் விமான நிலையம் வழியாக சென்ற லாரி கடுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஆழமான கால்வாய்க்குள் விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாகவும், உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற உடனடி விபரம் ஏதும் தெரியவில்லை என்றும் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top