2018.10.23 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்



01. நோயை கட்டுப்படுத்தல் நிகிச்சை மற்றும் சேமநலனுக்கான தேசிய சிறுநீரக நிதியத்தை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 06 ஆவது விடயம்)
காரணம் அடையாளம் காணப்பட்டாத தொற்றா சிறுநீரக நோயினால் அவதியுறும் குறைந்த வருமானத்தைக் கொண்டவர்களுக்கு மிகவும் முறையான சிகிச்சை நோய் நிவாரணம் மற்றும் சேமநல சேவையை வழங்குவதற்காக தேசிய சிறுநீரக நிதியம் அமைக்கப்பட்டது. இந்த நிதியத்தை பயன்படுத்தி பயனுள்ள வகையில் முன்னெடுக்கும பொருட்டு தெளிவுபடுத்தும் வேலைத் திட்டம் ஒன்றும் சிறுநீரக நோயாளர்களை முன்கூட்டியே அடையாளம் காணும் வேலைத் திட்டம் ஒன்றும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான சுகாதாரத்துறையில் அடிப்படைவசதிகளை அபிவிருத்தி செய்தல் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற செயற்பாட்டுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிதியத்தின் செயற்பாடுகளை மிகவும் செயல்திறன் மிக்கதாக மேற்கொள்வதற்கென ஜனாதிபதி செயலாளரைத் தலைவராகக் கொண்ட கண்காணிப்பு சபையொன்றை நியமிப்பதற்கும் நிதியத்தின் மூலமான பயன்களை வழங்குவதற்கான நடைமுறையொன்று வகுக்கப்படவுள்ளது. இதற்காக மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. பிரதேச அபிவிருத்தி வங்கியை வலுவூட்டுவதற்கான வேலைத் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 12 ஆவது விடயம் )
பிரதேச அபிவிருத்தி வங்கியை வலுவூட்டுவதற்கான திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும் அந்த வங்கியின் செயற்பாடுகளை வலுவூட்டுவதற்குமாக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வறுமையை கட்டுப்படுத்தும் ஜப்பான் நிதியத்தின் ஊடாக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடன் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் சம்பந்தப்பட்ட கடன் உடன்படிக்கையை மேற்கொள்வதற்குமாக பதில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 13 ஆவது விடயம்)
கால நிலை மாற்றத்துக்கு ஏற்றவகையில் விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தித் திpட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்ததி அமைப்பின் (ஐடிஏ) னால் 125 அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இது தொடர்பான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் சம்பந்தப்பட்ட உடன்படிக்கையை மேற்கொள்வதற்குமாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களை வலுவூட்டுதல் மற்றும் உள்ள10ராட்சி பிரதேசத்தில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக நிதி உதவியை பெற்றுக் கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 14 ஆவது விடயம்)
உள்ளுராட்சி மன்றங்களை வலுவூட்டுவதற்கும் பிரதேசங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் வடக்கு. கிழக்குஇ வடமத்தி. மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் உள்ள 134 உள்ளு10ராட்சி மன்றங்களை உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இந்தத் திட்டத்துக்காக 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு உடன்பட்டுள்ளது. இதற்கு அமைவாக சம்பந்தப்பட்ட நிதியைப் பெற்றுக்கொள்வதற்கென கடன் இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் சம்பந்தப்பட்ட கடன் உடன்படிக்கையை மேற்கொள்வதற்குமாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. பௌத்த சித்தாந்தங்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச பௌத்த அமைப்பை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 16 ஆவது விடயம்)
தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பௌத்த சித்தாந்தங்களை ஊக்குவிப்பதற்காக சர்வதேச பௌத்த அமைப்பொன்றை நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பௌத்த சிந்தனைகளை பிரபல்யப்படுத்துதல்இ பிரச்சார கேந்திர நிலையமாக இலங்கையை முன்னெடுப்பதற்கும் உலக முழுவதிலும் உள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள் மற்றும் இடங்களை பாதுகாப்பதற்கும் பாதுகாப்புக்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. உத்தேச சர்வதேச பௌத்த அமைப்பை நிறுவுவதற்கு தேவையான அரசியல் யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக பௌத்த அலுவல்கள் அமைச்சர் காமினி ஜயவிக்கிர பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. உள்நாட்டில் வர்த்தக விமான போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல். (நிகழ்;ச்சி நிரலில் 17 ஆவது விடயம்)
சுற்றுலா தொழில்துறை மேம்பாட்டுக்காக உள்நாட்டு வர்த்தக விமான சேவைகளை முன்னெடுப்பதற்கென பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவான நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக உலக வர்த்தக பயணிகள் விமான பயண நடவடிக்கைகளுக்காக பலாலி விமான நிலையத்தை பயன்படுததுவற்கும் இதற்காக பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக 1960 மில்லியன் முதலீட்டுடன் இலங்கை விமானப் படையின் மூலம் விரைவாக மேற்கொள்வதற்கும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த கூட்டுப் பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. அரச நிதி முகாமைத்துவ திருத்த சட்டமூலத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 20 வது விடயம்))

அரச நிதி முகாமைத்துக்கான பணிகளின் வெளிப்படைத்தன்மை பொறுப்புக் கூறல். பயன்கள்இ செயபல்திறன் மற்றும் சேமிப்புஇ தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக இத்துறையைச் சேர்ந்த முன்னோடிகளைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் சிபாரிசு செய்யப்பட்டிருந்த அரச நிதி முகாமைத்துவ நிதி முகாமைத்துவ சட்டமூலம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு சிபாரிசுகளை உள்ளடக்கி அரச நிதி முகாமைத்துவ திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இரட்டை வரியை தவிர்ப்பதற்கும் வருமானத்தின் அடிப்படையில் வரியை செலுத்துவதை தவிர்க்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கிடையில் உடன்பாடு எட்டப்படவுள்ளது. (நிகழ்ச்சி நிரலில் 21 ஆவது விடயம்))

இரட்டை வரியை தவிர்ப்பதற்கும் வருமானத்தின் அடிப்படையில் வரி செலுத்துவதை தவிர்ப்பதை தடுப்பதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கிடையில் உடன்படிக்கை ஒன்று எட்டப்படவுள்ளது. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. இலங்கை மற்றும் பெலருஸ் குடியரசுக்கும் இடையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் புதிய தயாரிப்புக்கள் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 23 ஆவது விடயம்)
பெலருஸ் குடியரசுக்கும் இலங்கைக்குமிடையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப புரிந்துணவை வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்குமான புரிந்துணவு உடன்படிக்கை எட்டப்படவுள்ளது. இதற்காக விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சீசெல் அரசாங்கத்தின் சீசெல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கிடையில் உடன்படிக்கையை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 24 ஆவது விடயம்)
இலங்கை தொழில்நுட்பம் பல்கலைக்கழகம் மற்றும் சீசெல் அரசாங்கத்தின் சீசெல் தொழில் நுட்ப நிறுவனத்திட்கிடையில் கல்வி ஆய்வு பயிற்சி பணியாளர் சபை பரிமாறல் உற்பத்தி அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைந்த மாணவர் செயற்பாடுஇ உள்ளிட்ட பிரிவுகள் தொடர்பில் இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கும் சீசெல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. தேமோதர ரேஸ்குரு நீர்த்தேக்கத்தை அமைப்பதற்காக ஒரு ஏக்கர் நிலத்துக்கு இழப்பீட்டை வழங்குதல் (நிகழ்;ச்சி நிரலில் 26 ஆவது விடயம்)

பதுளை, ஹாலி ஹெல, எல்ல, கூட்டு நீர் விநியோக திட்டத்தில் தெம்மோதர ரெஸ்குரு நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காக எல்ல, மற்றும் ஹாலி- ஹெல பிரதேச செயலாளர் பிரிவுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிக்காக அந்த காணி உரிமையாளர்களுக்கு 61.37 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்குவதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. சிறுநீரக நோயாளர்களுக்காக தானியக்க டயாலிசிஸ் முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெற்றுக் கொள்ளும் முறையொன்றை அறிமுகப்படுத்தும் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 28 ஆவது விடயம்)

சிறுநீரக நோயாளர்களுக்காக தானியக்க டயாலிசிஸ் முறையொன்றை (p) பயன்படுத்தி வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெற்றுக்கொள்ளக் கூடிய தானியக்க டயாலிசிஸ் கட்டமைப்பு ஒன்று (யுரவழஅயவநன Pநசவைழநெயட னுயைடலளளை ) அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனை ஒன்று இதற்கு முன்னர் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இந்த ஆலோசனையை மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு இந்த பரிதுரையை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. அரசாங்க வைத்தியசாலைகளில் தற்பொழுது உள்ள எனலொக் எக்ஸ் கதிர்வீச்சு இயந்திரத.தை டிஜிடல் எக்ஸ் கதிர்வீச்சு கட்டமைப்பாக மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 31 ஆவது விடயம்)

நோயை ஆரம்ப சந்தர்ப்பத்திலேயே அடையாளம் கண்டு மிகவும் வெற்றிகரமான நோயை கண்டறியும் டிஜிடல் எக்ஸ் கதிர்வீச்சு புகைப்படத்தை பயன்படுத்தும் தொழில்நுட்ப முறையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரசாங்க வைத்தியசாலைகளில் தற்பொழுது பயன்படுத்தப்படும் எனலொக் எக்ஸ் கதிர்வீச்சு புகைப்படத்துக்கு பதிலாக டிஜிட்டல் எக்ஸ் கதிர்வீச்சு தொழில்நுட்பபத்தை பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளில் தற்பொழுது உள்ள 50 டிஜிட்டல் கதிர் வீச்சு வலைப்பின்னலுடன் ஒன்றிணைத்து மேம்படுத்துவதற்கும் நடமாடும் 25 டிஜிட்டல் எக்ஸ் கட்டமைப்பை பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக பெல்ஜியத்தின் (குஐNநுஓPழு ) நிவாரண நிதி முறையின் கீழ் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி உயர் தொழில் நுட்பத்துடனான டிஜிட்டல் கதிர் வீச்சு ஆய்வு கட்டமைப்பொன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளதுஇ இதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு ஆமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. ஒலுவில் துறைமுகத்தின் முக்கிய பகுதியில் நிறைந்துள்ள மணலை அகற்றுதல் (நிகழ்ச்சி நிரலில் 32 ஆவது விடயம்)
ஒலுவில் துறைமுகத்தில் மணல் நிறைந்திருப்பதால் கடற்றொழில் வள்ளங்கள் இந்தத் துறைமுகத்துக்குள் உள்வாங்கப்படுவதில் சிரமங்கள் ஏற்படுவதினால் இந்தப் பிரதேசத்தில் கமற்றொழிலாளர்களின் அன்றாட ஜீவனோபாயத்தை முன்னெடுப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக கடற்றொழில் வள்ளங்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்பாடாத வகையில் துறைமுக பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் துறைமுக முக்கிய பகுதியில் தேங்கியுள்ள மணலை ரோஜர் இயந்திரத்தை பயன்படுத்தி அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அமைச்சரவை இதனை அறிந்துகொள்வதற்காக துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் சமர்ப்பித்த வி;யங்களில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.

15. அனுராதபுரம் மாவட்ட செயலக அலுவலகத்துக்கு புதிய கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 33 ஆவது விடயம்)மிகவும் தரமான பொது மக்கள் சேவையை மேற்கொள்வதற்காக தற்பொழுது அனுராதபுரம் மாவட்ட செயலகம் நடத்தப்பட்டு வரும் கட்டிடத் தொகுதியில் இடவசதிகளுக்கான வரையறையை கவனத்திற் கொண்டு அனுராதபுரம் மாவட்ட செயலகம் மற்றும் பல்வேறு 30 அரச நிறுவனங்களின் அலுவலகங்களுக்காக 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டதும் 7 மாடிகளைக் கொண்டதுமான அலுவலக கட்டிடத் தொகுதிக்கு 1731.3 மில்லியன் ரூபா செலவில் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜர அபேவர்த்தன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. கதிர்காமம் புனித பூமி நகரத்தில் பொது மக்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 36 ஆவது விடயம்)கதிர்காமம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மேலதிகமாக கதிர்காமம் புனித பூமி நகரத்துக்கு வருகைதரும் பொதுமக்களின் இயற்கை கழிவறை வசதிகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கான வசதிகள் போதுமான மட்டத்தில் இல்லாததினால் கதிர்காமம் மற்றும் கெபிலித்த பிரதேசத்தில் இயற்கை கழிவுக்கு தேவையான கட்டமைப்பொன்று 1 731 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக மா நகரம் மற்றும் மேல்மாகாண அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. பொல்துவ, குறுக்குப் பாதையை சுஹூறுபாய தொடக்கம் கனத்த பாதை வரையில் விரிவுப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 37 ஆவது விடயம்)
அரச நிருவாக அலுவலகததை ஸ்ரீ ஜெயவர்தன கோட்டைஇ நிருவாக நகரத்துக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதுடன்இ இதனால் இதற்கு அமைவாக இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதன் கீழ் தெமட்டகொட தொடக்கம் சுற்று வட்ட வீதி வரையிலான வீதியில் உத்தேச வீதியொன்றை நிர்மாணிப்பதற்கு பரிந்துறைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரையில் இதற்கு முன்னர் ஒரு பகுதி பொல்துவ சந்தியிலிருந்து கொஸ்வத்தை வரையிலான வீதி நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் முதலாவது பகுதி பொல்துவ சந்தியிலிருந்து சுஹூறுபாய வரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இரண்டாம் கட்டத்தின் கீழ் சுஹூறுபாய தொடக்கம் மயான வீதி வரையில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான 328.63 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 38 ஆவது விடயம்)
மாகதுர என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சேதன பசளை விவசாயத்துத்துறைக்கான விசேட கேந்திரத்தின் மூலம் சேதன பசளை தொழிற்சாலை மற்றும் சேதன பசளை தொடர்பான ஆய்வு மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறுதல் மேற்கொள்ளப்படுவதுடன் மாகதுர வலய விவசாய ஆய்வு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் மூலம் பயிர் மேம்பாடு மண் மற்றும் தாவர போசாக்குப் போன்றவை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட தொழில்துறை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிறுவனம் இரண்டையும் ஒன்றிணைப்பதன் மூலம் நிலையான அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் ஒன்றை ஸ்;தாபிப்பதற்கு ஆற்றல் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக சுற்றாடலுக்கு பொருத்தமான விவசாயம் தொடர்பான பயிற்சி மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் நாடு முழுவதிலும் உற்பத்தியை ஊக்குவித்தல்இமுன்னெடுத்தல்இ செயற்கை உர விவசாயம் மற்றும் இயற்கை உரம் தொடர்பாக ஆய்வை நடத்துதல்இ தேசிய சேதன பசளையை உறுதி செய்யும் முக்கிய நிறுவனம் என்ற ரீதியிலும் - - உயிர் விஞ்ஞானத்துக்காக தேசிய ஆய்வை கருதி ஒன்றிணைக்கப்பட்ட புதிய நிறுவனத்துக்கு பொறுப்புக் கூறக்கூடியதாக இருக்கும். இதற்காக இந்த இரண்டு நிறுவனத்தையும் ஒன்றிணைத்து நிலையான விவசாய மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் அதற்குத் தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்குமாக விவசாய அமைச்சர் மகிந்த அமர்;;;;;;வீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. விதை மற்றும் கன்று முதலானவற்றின் தரத்தை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 40 ஆவது விடயம்)உணவு பயிர் பெருந்தோட்டப் பயிர் ஏற்றுமதி விவசாய பயிர்இ மலர் மற்றும் அலங்கார கன்றுகள் வன உற்பத்திக்கான கன்றுகள் உள்ளிட்ட அனைத்து கன்றுகளின் தரம் முதலானவற்றை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் மற்றும் பொறுப்புக் கூறல் 2003 ஆம் ஆண்டு இலக்கம் 22 இன் கீழான விதை சட்டத்தின் மூலம் விவசாய திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுஇ இதற்கு அமைவாக இந்தப் பணிகளுக்காக தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை தொடர்ந்தும் சரியான வகையிலும் முறையாகவும் செயல்திறன்மிக்கதாகவும் மேற்கொள்வதற்காகவும் விவசாய திணைக்களத்தின் விதைகளை உறுதி செய்யும் சேவையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விதை ஆய்வு நிலையங்களுக்கு மேலும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக தேவையான நிதியை வழங்குவதற்கு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. தேசிய ரீதியில் பகுப்பாய்வு விஞ்ஞான கூடம் ஒன்றை அமைத்தல் (நிகழ்;ச்சி நிரலில் 41 ஆவது விடயம)
இரசாயன மற்றும் சேதன பசளை மற்றும் பூச்சிக்கொல்லி இரசாயனம்இ பயன்படுத்தும் நிலைமை மற்றும் மேலதிகமாக பயன்படுத்துதல் மூலம் இந்த நாட்டின் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களின் அடங்கியுள்ள அசுத்தத்தன்மை மட்ட ஒழுங்கு விதிகளுக்காக உயர் நிலையிலான விஞ்ஞான கூடம் ஒன்றை தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறான உயர் தர விஞ்ஞான கூடமொன்றை அமைப்பதன் மூலம் இந்தத் துறைக்கான பகுப்பாய்வு அனைத்துத் தரப்பினருக்கும் குறைந்த செலவில் உயர் விசேட மதிப்பீடு சேவையொன்றை வழங்குவதற்கான வசதிகள் செய்யப்படுகின்றன. இதற்கமைவாக 286 மில்லியன் ரூபா முதலீட்டுடன் தேசிய மட்டத்திலான ஆய்வாளர்;கள் பகுப்பாய்வு விஞ்ஞான கூடமொன்றை அமைப்பதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர அவர்கள் சமர்ப்பித்த பரிந்துறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. விவசாய திணைக்களத்தின் விதை மற்றும் கன்று வகைகளை விநியோகிக்கும் கட்டமைப்பை நவீனமயப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 42 ஆவது விடயம
விவசாய திணைக்களத்தின் விதைப் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி செயற்பாடுகளுக்காக பயன்படுத்தக் கூடிய அத்தியா வசதிகளுக்கு உள்ள வரையறையின் காரணமாக போதியளவு விதை தயாரிப்பை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அமைவாக விதை தயாரிபபு செயற்பாடுகளை இயந்தி மயப்படுத்துவதற்கும் இலுப்பலம்இ அம்பாறைஇ மற்றும் அலுத்தரம விவசாய பண்ணைகளை ஒன்றிணைத்து கட்டிடத் தொகுதியாக அமைத்தல்இ பெல்வெஹேர மற்றும் படஅத்த விவசாய பண்ணைக்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்தல்இ லாங்கலஇ சீத்தாஎலியஇ பட்டஅத்த மட்டும் அம்பாறை விவசாய பண்ணைகளுக்காக நான்கு விதை களஞ்சியசாலைகளை நிர்மாணிப்பதற்கும் விதை மற்றும் மரக் கன்றுகளை அபிவிருத்தி செய்வதற்கான மத்திய நிலையங்களை ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக தேவையான முதலீட்டுக்கான மத்திய கால வரவு செலவு கட்டமைப்புக்குள் பெற்றுக் கொள்வதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவது தொடர்பான கண்காட்சியை மற்றும் மாநாடு மற்றும் விருதுகளை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 43 ஆவது விடயம்)
இலங்கை விவசாயத்துறை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையாக விவசாய நவீன மயம் தொடர்பான கண்காட்சியொன்றும் விவசாய தொழில்துறை நவீனமய மாநாடு மற்றும் விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கான விருதுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று 2018 டிசம்பர் மாதம் 11 – 19 வரையிலான காலப்பகுதியில் கொழும்பு சர்வதேச ஞாபகாரத்த மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇ இந்த வேலைத் திட்டம் விவசாய அமைச்சின் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துறையினரின் பங்களிப்புடன் நடத்துவதற்கு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. களனி வெள்ளத்தை தடுப்பதற்காக பாதுகாப்பு கட்டிடத்துக்கான பொறியியல் திட்டத்துக்கு தேவையான புவி விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 49 ஆவது விடயம்)

களனி கங்கை அடுப்புக்கு அருகாமையில் வெள்ளத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அங்வெல்லையிலிருந்து கங்ஹாமோய வரையில் வெள்ளப்பாதுகாப்பு மதில் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தப் பணிக்கான மூன்று உப திட்டங்களின் கீழ் அமற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச பாதுகாப்புஇ வேலியை நிர்மாணிப்பதற்கு தல ஆய்வு புவி விஞ்ஞான ஆய்வினால் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு இந்தப் பணியை தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் மூலம் மேற்கொள்வதற்காக நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. குடாவிலட்சிய குளம் மற்றும் தெமட்டகல குளம்இ ஆகியவற்றை புனரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 50 ஆவது விடயம்)
மகா விலாச்சிய பிரதேசத்தில் வில்பத்து தேசிய பூங்காவுக்கு அருகாமையில் அமைந்துள்ள மகாவிலாச்சி நீர்த்தேக்கத்தில் சேர்க்கப்படும் நீரை அந்தப் பிரதேச பொதுமக்களின் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக நீரை விநியோகிக்கும் ஒரேயொரு நீ;ர்த்தேக்கமாகும். இங்கு சேகரிக்கப்படும் நீர் பொதுமக்களின் தேவைக்கு போதுமானதல்ல. இதன் காரணமாக வில்பத்து தேசிய பூங்காவில் அமைந்துள்ள தற்பொழுது கைவிடப்பட்டுள்ள பாரிய குளம் ஒன்றான குடாவிலச்சி குளம் மறுசீரமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பலாகல பிரதேசத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கிராம குளத்தில் எப்பொழுதும் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதற்குத் தீர்வாக தற்பொழுது கைவிடப்பட்டுள்ள தெமட்டகல குளம் மறுசீரமைக்கப்படுகின்றது. எல்லஓய ஊடாக ஊக்குவிக்கப்படுதல் மற்றும் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக கிராம குளங்களுக்கு மேலதிகமாக நீர் விநியோகத்திட்டத்தை நடைமுறைப்படு;த்த முடியும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக சிறிய விலாச்சி குளம் மற்றும் தெமட்டகல குளம் ஆகியவற்றை மறுசீரமைப்பதற்காக நீர்ப்பாசன மற்றும் நீர்வள மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மனிதவள அபிவிருத்தி (நிகழ்ச்சி நிரலில் 51 ஆவது விடயம்)
உயர்தர தரத்துக்கான தொழில்நுட்ப கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து 10 அரச பல்கலைக்கழகங்கள் மூலம் தொழில்நுட்ப கற்கைநெறியில் புதிய பட்ட கற்கைநெறியை முனனெடுக்கப்படுவது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக களனி. ரஜரட்ட மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மூன்று பீடங்களை அமைப்பதற்கும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமொன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக கற்கைநெறியை ஆரம்பிப்பதற்காக பல்கலைக்கழங்களுக்கு தேவையான பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுக்காக 2018 தொடக்கம் - 2023 ஆம் ஆண்டு வரையிலான காலவட்டத்துக்குள் 26 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. வட மாகாணத்தில் பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டத்தில் கடற்றொழிலுக்காக அடிப்படை வசதி மற்றும் நீர் வாழ் உயிரின உற்பத்திக்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 52 விடயம்)
கடற்றொழில் துறைமுகம் நங்கூரப் பகுதி மற்றும் இறங்குதுறையை நிர்மாணித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்இ நீர் வாழ் உயிரின அபிவிருத்திஇ மற்றும் ஜீவனோபாய அபிவிருத்தி ஆகிய மூன்று விடயங்களைக் கொண்ட வட மாகாண பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டம் 2018 – 2024 காலப் பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்குவதற்கு உடன்பட்டுள்ள 174 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கடற்றொழில் அபிவிருத்தி வசதி மற்றும் நீர் வாழ் உயிரின அபிவிருத்தி வெளியீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்கு அலகுகொன்று (Pசழதநஉவ ஐஅpடநஅநவெயவழைn ருnவை Pஐரு) அமைப்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அபிவிருத்தி மற்றும் கிராம அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27. உச்ச நீதிமன்ற கட்டத் தொகுதியில் மத்திய காற்றோற்ற கட்டமைப்புக்கு 'சிலர' இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 62 ஆவது விடயம்உயர் நீதி மன்றத்திலும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும் நீதிமன்றப் பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான - காற்றோற்ற வசதிகளை வழங்குவதற்காக உப நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் நடுத்தர 'சிலர'; இயந்திர்த்துடனான கட்டமைப்புக்கு 'சிலர'; இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கு 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோறளை அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

28. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து தொடர்பான பொருட்கள் பட்டியல் உள்ளடக்கப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 65 ஆவது விடயம்)
விளையாட்டு வீரர்களினால் பயன்படுத்தக் கூடாத தடை செய்யப்பட்ட பொருட்கள்இ மற்றும் நடைமுறைக்கு உட்பட்ட பட்டியல் ஒன்று சர்வதேச தடை ஊக்கமருந்து தடுப்பு பிரதிநிதிகளினால்; வருடந்தோறும் பிரகடனப்படுத்தப்படுகிறது. இதற்கு அமைவாக 2013 ஆம் ஆண்டு இலக்கம் 33 கீழ் விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்குவிப்பு பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டு சட்டத்தின் 34 ஆவது சரத்துக்கு அமைவாக இலங்கையினால் இந்த பொருட்கள் விளையாட்டுக்களின் போது தடைசெய்யப்பட்ட பொருட்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட பட்டியலில் உள்ளக்கப்பட்டுள்ள 2083 இன் கீழ் 32 என்ற விசேட வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டுத்துறை மைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

29. ஆனமடுவ, தொழில் பயிற்சி மத்திய நிலையத்தில் வசதிகளை விரிவுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 71 ஆவது விடயம்)
தற்பொழுது தொழில் வாய்ப்பு சந்தையை இலக்காகக் கொண்ட கற்கைநெறியை நடத்துவதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றம் ஆனமடுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு பரிந்துரைத்துள்ளது. இதன் ஊடாக பேக்கரி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புக்கள் கணனிஇ கிராப்பிக். டிசையினியர் மற்றும் மனித வள முகாமைத்துவம் போன்ற தேசிய தொழில் தகுதி (Nஏஞ 4) (கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு சமமான) தரத்துக்கு உட்பட்ட தொழில் சந்தையில் ஆகக் கூடிய கோரிக்கையைக் கொண்ட கற்கைநெறியை நடத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இதற்கு அமைவாக இதற்கென 100 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக இளைஞர் அலுவல்கள் திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

30. களனி கல்வி வலயத்தில் தமிழ் மொழில் தேசிய பாடசாலையொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 73 ஆவது விடயம்)

கம்பஹா. வத்தளை பிரதேசங்களில் தமிழ் மொழியில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம் என்ற பெயரில் தமிழ் மொழி இந்து தேசிய பாடசாலையொன்று களனி கல்வி வலயத்தில் அமைப்பதற்காக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச மொழி அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

31. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீதி அபிவிருத்தித் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 80 ஆவது விடயம்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுவினால் அந்தப் பிரதேசங்கள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பது தொடர்பாக அடையாளம் ;காணப்பட்டுள்ள வீதிகளின் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான 5 பெக்கேஜ் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு நிலையியல் குழுவினால் சிபாரிசுக்கு அமைய ஏற்றுக் கொள்ளப்பட்ட வீதிகளை நிர்மாணிக்கும் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்வதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

32. இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட பஸ்களுக்கு எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 82 ஆவது விடயம்)
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட பஸ்களுக்கு எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் குழுவின் சிபாரிசுக்கு அமைய (ஆஃளு டுயமெய ஐழுஊ Pடுஊஇ ஆஃள hநஎயசழn டுரடிசiiiஉயவெ டுயமெய Pடுஊ) மற்றும் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

33. மாத்தறை, - பெலியத்த ரயில் பாதையில் ஒரு பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு அருகாமையில் பாதையை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 83 ஆவது விடயம்)
மாத்தறை பெலியத்த ரயில் பாதை திட்டத்தில் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறதுஇ அத்தோடு 2019 ஆம் ஆண்டிலிருந்து கொழும்பிலிருந்து பெலியத்த வரையிலான கரையோரத்தில் ரயில் பாதையை அமைத்து ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மாத்தறை பெலியத்த ரயில் பாதையில் ஒரு பகுதியில் அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வீடுகள் அமைந்திருப்பதினால் அவர்களுக்கு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விடயத்தை கவனத்தில் கொண்டு ரயில் பாதைக்கு அமைவாக பாதையை நிர்மாணிப்பதற்கான தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 12.95 மொத்த கிலோ மீற்றர் தூரத்துக்கான பாதையை நிர்மாணிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கண்காணிப்பின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 34. கம்பஹா, அத்தனகலை மற்றும் மினுவாங்கொட ஒன்றிணைந்த நீர் விநியோகத் திட்டத்தின் கீழான நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல். (நிகழ்ச்சி நிரலில் 88 ஆவது விடயம்)

கம்பஹா, அத்தனகலை மற்றும் மினுவாங்கொடை ஒன்ணைந்த நீர் விநியோகத் திட்டத்தின் ஒப்பந்தத்திற்கு அமைவாக ஆஃளு hiயெ ஆயஉhiநெநசiபெ ஊழசிழசயவழைn(ஊஆடீஊ) என்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் நீர் விநியோக சபையினால் மேற்கொள்ளக் கூடிய மேலும் முக்கிய 8 துணை ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் துணை ஒப்பந்தமான அத்தனகலை பிரதேசத்தில் நீர் விநியோகத்துக்கான பிரதான குழாய்க்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகை குழுவின் சிபாரிசுக்கு அமைய (ஆஃளு ளுநைசசய ஊழளெவசரஉவழைn டுiஅவைநன மற்றும் மு னுயு றுநநசயளiபொந ஊழ.(Pஎவ) டுiஅவைநன ) என்ற நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த நடவடிக்கையின் கீழ் வழங்கப்படவுள்ளது. இதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

35. பாணதுறை, ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல் மற்றும் வைத்திய உபகரணங்களை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 90 ஆவது விடயம்)
பேருவளை. களுத்துறை, பண்டாரகம, இரத்தினபுரி, மொரட்டுவை மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்காக வைத்திய சேவை வழங்கும் பாணதுறை ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல் மற்றும் வைத்திய உபகரணங்களை வழங்குவதற்காக பெறுகை அமைச்சரவை குழுவினால் நியமிக்கப்பட்ட பெறுகை குழுவின் சிபாரிசுக்கு அமைய 106.4 யூரோ மில்லியனுக்கு ஜெர்மன் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

36. இலங்கை துறைமுக அதிகார சபையின் ஜய கொள்;;கலன். சமகி கொள்கலன் பிரிவில் பயன்படுத்தப்படும் நேவிஸ் பகுதியின் முகாமைத்துவ கட்டமைப்பை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 92 ஆவது விடயம்)
இலங்கை துறைமுக அதிகார சபையின் ஜய கொள்கலன்இ சமகி கொள்கலன் பகுதியின் செயற்பாட்டு பணிக்காக பயன்படுத்தப்படும் நேவிஸ் பகுதியின் முகாமைத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய வரையறுக்கப்பட்ட எக்கஸஸ் நேவீஸ் ஜெயின் வென்சர் நிறுவனத்திடம் வழங்குவதற்காக துறைமுகம் மற்றும் கடல் அலுவல்கள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

37. பிட்டிபன, - தலகல வீதியில் பிட்டிபன சந்தியிலிருந்து தாம்பே வீதி வரையில் தரவு மத்திய நிலையம் வரையிலான 4 கிலோ மீற்றர் தூரத்தை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 93 ஆவது விடயம்)
மேற்கு வலய தொழில்நுட்ப வலய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள மாலபேஇ கடுவெலஇ அத்துருகிரியஇ ஹோமாகமஇ நகரங்கள் ஏனைய பிரதேசங்களுடன் போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவதற்காக ஐந்து முக்கிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள்இ முக்கியத்துவ அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பிட்டிபன. தலகல வீதியில் பிட்டிபன சந்தியிலிருந்து தாம்பே வீதி தரவு மத்திய நிலையம் வரையிலான நான்கு கிலோ மீட்டர் தூரத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் பெறுகை மேல் முறையீட்டு சபையின் சிபாரிசுக்கு அமைய ( ஆஃளு குinவைந டுயமெய (Pஏவ) என்ற நிறுவனத்துக்கு வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவிக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

38. ஆழ்கடலில் மணலை எடுப்பதற்காக கிரேஜர் இயந்திரத்தை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 94 ஆவது விடயம்)
கட்டிட நிர்மாணத்துக்காக பயன்படுத்தப்படும் நதி மணலுக்கு தட்டுப்பாட்டின் காரணமாக அதற்கு மாற்று மூலப் பொருள் என்ற ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ள கடல் மணலுக்கான கோரிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வாக காணிகளில் மண் போட்டு நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தினால் கட்டிட நிர்மாணத்திற்காக பயன்படுத்தக் கூடிய கடல் மணலை தயாரித்து விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் தற்பொழுது கட்டிட நிர்மாணத்துறையில் மொத்தத் தேவையில் சுமார் பத்து சத வீதம் இது விநியோகிக்கப்படுகிறது. கட்டிட நிர்மாணத்துறை வளர்ச்சியுடன் எதிர்காலத்தில் மணலுக்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்காக ஆழ்கடல் பிரதேசத்தில் மணலை பெற்றுக் கொள்வதற்காக கிரேஜர் இயந்திரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்காக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

39. நெல் சந்தைப்படுத்தும் சபை கொண்டுள்ள களஞ்சிய கொள்வனவை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 95 வது விடயம்)
2018 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நெல் அறுவடையை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்காக பெலியத்த மற்றும் மிகஹாஜெதுரஇ பிரதேசத்தில் 2000 மெற்றிக் தொன் கொள்வனவுக்கான இரண்டு களஞ்சியசாலைகளை நிர்மாணித்தல் மற்றும் பழமைவாய்ந்த 39 களஞ்சியசாலைகளை புனரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விஞ்ஞான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்காக தேவையான பொறியியல் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுதல் ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்தல் மற்றும் மேலதிக கண்காணிப்புக்கான பொறியியலாளர் பணிகளை மத்திய ஆலோசனை செயலகத்தின் மூலம் நிறைவேற்றுவதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

40. களனி ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 96 ஆவது விடயம்)
தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பில் வசதிகளை மேம்படுத்துவதற்காக களனி பல்கலைக்கழகத்தில் 3 மாடி தங்குமிட வசதி கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பல்லின கட்டிடத் தொகுதியொன்று 3 மாடிகளைக் கொண்டதாக அமைப்பதற்கும் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய தொழில்நுட்ப பீடத்திற்காக கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

41. ஸ்ரீ ஜயவர்தனபுர தாதியர் பீடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்;ச்சி நிரலில் 103 ஆவது விடயம்)
ஸ்ரீ ஜயவர்தனபுர தாதியர் பீடத்திற்காக 22 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கபக அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்காக நிலையான (pடைடiபெ) பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை மூன்று பெக்கேஜிகளாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய இதில் இரண்டு பெகேஜிகள் 124.8 ரூபாவுக்கும் 137.5 மில்லியன் ரூபாவுக்கும் வரையறுக்கப்பட்ட நவலோக்க (pடைடiபெ) தனியார் நிறுவனத்துக்கும் ஏனைய பெகேஜை 126 மில்லியன் ரூபாவுக்கு வரையறுக்கப்பட்ட டிபி ஜயசிங்க (pடைடiபெ); நிறுவனத்துக்கும் வழங்கப்படவுள்ளது. இதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

42. 2018 – 19 வருடங்களுக்கான இயற்கை அனர்த்த காப்புறுதி தேசிய பரிந்துரைக்கான எழுத்துறுதி காப்புறுதி (நிகழ்ச்சி நிரலில் 108 ஆவது விடயம?
இயற்கை அனர்த்தங்களினால் மொத்த நாட்டையும் பாதுகாப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் காப்புறுதி பரிந்துரை முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் காப்புறுதி முறை தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதன் கீழ் இதுவரையில் 15 மில்லியன் ரூபா காப்புறுதியாக பெறப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தத்தின் மூலம் பாதிக்கப்படுவதினால் தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் அனர்த்தத்தை குறைப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச காப்புறுதி நிறுவனத்தின் மூலம் எழுத்துறுதியைப் பெற்றுக் கொள்வதற்காக இளைஞர் அலுவல்கள் திட்டமுகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

43. பெருமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்தல் (நிகழ்;ச்சி நிரலில் 112 ஆவது விடயம்)
2002 ஆம் இலக்கம் 14 இன் கீழான பெருமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கு அமைவான வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட எத்தகைய உத்தரவும் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு அமைவாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்தப்படும் வெற்வரி பணத்தை மீளளிப்பதற்கான முறையை நடைமுறைப்படுத்தும் தினம் பிரகடனப்படுத்தப்பட்ட இலக்கம் 2088- 2 ஐக் கொண்ட 2018 செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு கீழ்கண்ட நடைமுறையின் கீழ் செலுத்தப்பட்ட வெட் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கக் கூடிய பொருட்கள் அவற்றின் ஆகக் கூடிய பெருமதி மற்றும் பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் முறையை விபரித்து பிரகடனப்படுத்தப்பட்ட இலக்கம் 2088 கீழ் 25 ஆன 2018 செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு ஆடை இறக்குமதி வெட் வரிக்கு உட்படுத்தப்பட்டமையினால் சிறிய அளவிலான ஆடை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படக் கூடிய தாக்கத்தை கருத்தில் கொண்டு ஆடை இறக்குமதியில் சம்பந்தப்பட்ட வரி வீதத்தை 5 சத வீதமாக குறைத்து வெளியிடப்பட்ட 2089-13 இலக்கத்தைக் கொண்ட 2018 செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் சீனி இறக்குமதி அல்லது இறக்குமதி செய்யப்பட்டு விநியோகத்தின் அடிப்படையில் வெட் வரி வீதம் 15 சத வீதம் தொடக்கம் 0மூ வரையில் குறைப்பதற்காக வெளியிடப்பட்ட இலக்கம் 2089 – 20 இலக்கத்துடனான 2018 செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்;;ப்பிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top