உலகின் மிகநீளமான55
கிலோமீற்றர் (34 மைல்)
தூரத்தைக் கொண்ட கடல் பாலம் இன்று திறப்பு
சீனா
- ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீளமான
கடல் பாலத்தை
சீன ஜனாதிபதி
Xi Jinping திறந்துவைத்தார். சீனாவின் சூஹாய்
நகரில் இந்த
நிகழ்வு இன்று
இடம்பெற்றது.
ஹாங்காங்கில்
இருந்து சீனாவுக்கு
55 கிலோமீற்றர் (34 மைல்) தூரம்
கடல் வழியாக
பயணம்செய்யக்கூடிய வகையில் 20 பில்லியன்
அமெரிக்கடொலர் செலவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த
பாலத்தின் நிர்மாணப்பணிகள்
2009 ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2016ஆம்
ஆண்டு இப்பாலத்தின்
நிர்மாணப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில காலதாமதங்களால் இப்பாலம் நீண்ட
இடைவெளிக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனூடாக
சீனா-ஹாங்காங்
இடையேயான பயண
நேரம், 3 மணி
நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துள்ளதாக
அந்நாட்டு ஊடகங்கள்
தெரிவித்துள்ளது. ஹொங்கொங் மற்றும் மக்காவு போன்ற
11 நகரங்களை உள்ளடக்கிய 68 மில்லியன் மக்களை இணைக்கும்
இந்த பாலம்,
சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல
வழி வகுக்கும்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment