பாகிஸ்தான் அரசுக்கு சவூதி அரேபியா
600 கோடி டாலர் நிதியுதவி
   
நிதி நெருக்கடியில் தள்ளாட்டம் போடும் பாகிஸ்தான் அரசுக்கு 600 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

பாகிஸ்தானின் நிதி நிலவரங்களை ஆய்வு செய்ய சர்வதேச நிதியத்தின் உயரதிகாரிகள் குழு நவம்பர் 7-ம் திகதி இஸ்லாமாபாத் வருகிறது. இதுதவிர, அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இம்ரான் கான் சவூதி அரேபியா நாட்டுக்கு சென்றுள்ளார். அவருடன் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. சவூதி மன்னர் சல்மான் மற்றும் அந்நாட்டின் அமைச்சர்களை இந்த குழுவினர் சந்தித்துப் பேசினர்.

சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி அளிக்க சவூதி அரசு முன்வந்துள்ளது. இதில் 300 கோடி டாலர்கள் ஓராண்டுக்குள் ரொக்கப்பணமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதி 300 கோடி டாலர்கள் அளவுக்கு சவூதியில் இருந்து கடனுக்கு பெற்றோலிய கச்சா எண்ணெய் வாங்கி கொள்ளலாம். அந்த தொகையை அடுத்த ஆண்டில் செலுத்தலாம். இப்படி, 3 ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் இருநாட்டு நிதி அமைச்சர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top