குடிநீர் கோரி மாவனெல்லயில்
வீதியில் இறங்கிய
6000 குடும்பத்தைச் சேர்ந்த மக்கள்
குடிநீர் வசதியைப் பெற்றுத் தரக்கோரி, மாவனெல்ல பிரதேசத்தில் பொதுமக்கள் இன்று வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் ஆறாயிரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கொழும்பு- கண்டி வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதியில் நீர் வடிகாலமைப்பு சபைக்குச் சொந்தமான நீர் குழாய்கள் 3 காணப்படும் நிலையில், இதனூடாக சரியான முறையில் நீர் வழங்கப்படுவதில்லையென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தும் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லையென்றும், இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகவும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நடைபவனியாக மாவனெல்ல நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு வந்து தமது பிரச்சினைகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

0 comments:
Post a Comment